அசத்தலான பிட்னஸ் மூலம் கவர்ந்திழுக்கும் பாலிவுட் அம்மாக்கள்!
- பாலிவுட் நடிகைகளான கரீனா கபூர் முதல் மலைக்கா அரோரா வரை சினிமாவில் நடிகையாகவும், சிறந்த தாயாகவும் இருந்து வருவதோடு, தங்களது பிட்னஸ்சையும் சிறப்பாக கவனித்து கொள்கிறார்கள். தாயாக மாறிய பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக இருக்கும் இவர்களின் பிட்னஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.
- பாலிவுட் நடிகைகளான கரீனா கபூர் முதல் மலைக்கா அரோரா வரை சினிமாவில் நடிகையாகவும், சிறந்த தாயாகவும் இருந்து வருவதோடு, தங்களது பிட்னஸ்சையும் சிறப்பாக கவனித்து கொள்கிறார்கள். தாயாக மாறிய பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக இருக்கும் இவர்களின் பிட்னஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.
(1 / 7)
தாய்மையை அடைந்துள்ள பாலிவுட் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து தங்களது உடல் அழகை கொஞ்சமும் இழக்காமல் பேனி பாதுகாத்து வருவதற்கு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்கள். இதற்கு அவர்கள் முழு அர்பணிப்புடன் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொள்வது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது, குழந்தை பெற்ற பின்னர் உடலின் அழகை பேனி பாதுகாப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் செலிப்ரிட்டு தாய்மார்கள் தங்களது பிசியான வாழ்க்கைக்கு இடையே உடல் அழகை பராமரிப்பதில் கவனம் செலுத்துவது பலரும் வியக்க வைக்கிறது. குழந்தை பெற்ற பிறகு நேரத்தை ஒதுக்கி தங்களது வழக்கமான பணியை மேற்கொண்டு பேறுகாலத்துக்கு பிறகு கூடுதலான உடல் எடையை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். பாலிவுட் அன்னையர்கள் மேற்கொள்ளும் யோகா, கார்டியே உள்பட இதர பிட்னஸ் பயிற்சிகள் பற்றி அறிவோம்.(Instagram)
(2 / 7)
ஷில்பா ஷெட்டி: மிகவும் ஸ்டைலான பாலிவுட் அன்னையாக திகழும் ஷில்பா ஷெட்டி, மிகப் பெரிய பிட்னஸ் ஆர்வலராக உள்ளார். இவர் தனது பிட்னஸை பேனி காப்பது மட்டுமில்லாமல் விடியோக்களின் மூலம் பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறார்(Instagram/@shilpashettyofficial)
(3 / 7)
சுஷ்மிதா சென்: அழகு ப்ளஸ் தைரியம் நிறைந்த தாயாக திகழும் சுஷ்மிதா சென் மிகத் தீவிரமான உடற்பயிற்சி மேற்கொண்டு பலரையும் கவர்ந்திழுக்கிறார். இது பலரையும் பிட்னஸ் பக்கம் மீண்டும் திரும்ப உத்வேகம் அளிக்கவே செய்துள்ளது. இவர் தனது மகள் ரீனி மற்றும் ஆலிஷா ஆகியோருக்கும் பிட்னஸ் பயிற்சியை கற்றுக்கொடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான வழியை அமைத்துக்கொடுத்துள்ளார்(Instagram/@sushmitasen)
(4 / 7)
மலைக்கா அரோரா: ஒர்க்அவுட் தொடர்பான செய்திகளில் எப்போதும் இடம்பிடிப்பவராக மலைக்கா அரோரா உள்ளார். இவர் இலக்கு நிர்ணயித்து, தனக்கே சவால் விடுத்து அதை செய்து காட்டுவதில் கொள்ளை பிரியம் கொண்டவராக உள்ளார். அதுமட்டுமில்லாமல் பிட்னஸ் ஒர்க்அவுட் பற்றி ரசிகர்களுக்கு ஆலோசனை வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ள மலைக்கா அரோரா, லைக்குகளையும் குவித்து வருகிறார்(Instagram/@malaikaaroraofficial)
(5 / 7)
பாக்யாஸ்ரீ: இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர், தற்போது ஸ்மார்ட் ஜோடி டிவி ஷோவில் பங்கேற்று வருகிறார். உடற்பயிற்சி, ஒர்க்அவுட் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர், பயிற்சி மேற்கொள்ளும் விடியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து லைக்குகளை அள்ளுகிறார்(Instagram/@bhagyashree.online)
(6 / 7)
சோகா அலி கான்: இவரது ஒர்க்அவுட் விடியோ அவ்வளவு எளிதாக இல்லாமல் யோகா, அதிதீவிர உடற்பயிற்சிகள் கொண்டதாக இருக்கும். இதன் விளைவாகவே தனது தோற்றத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் பராமரித்து வருகிறார்(Instagram/@sakpataudi)
மற்ற கேலரிக்கள்