Morning Quotes : வாழ்நாள் முழுவதும் இரும்புச்சத்து குறைபாடே வராது! தினமும் இந்த ரசம் மட்டும் சாப்பிட்டு பாருங்க!-morning quotes iron deficiency does not occur throughout life eat only this juice every day - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : வாழ்நாள் முழுவதும் இரும்புச்சத்து குறைபாடே வராது! தினமும் இந்த ரசம் மட்டும் சாப்பிட்டு பாருங்க!

Morning Quotes : வாழ்நாள் முழுவதும் இரும்புச்சத்து குறைபாடே வராது! தினமும் இந்த ரசம் மட்டும் சாப்பிட்டு பாருங்க!

Priyadarshini R HT Tamil
Sep 04, 2024 05:49 AM IST

Morning Quotes : வாழ்நாள் முழுவதும் இரும்புச்சத்து குறைபாடே வராது, தினமும் இந்த ரசம் மட்டும் சாப்பிட்டு பாருங்கள். எளிதாக செய்யவும் முடியும்.

Morning Quotes : வாழ்நாள் முழுவதும் இரும்புச்சத்து குறைபாடே வராது! தினமும் இந்த ரசம் மட்டும் சாப்பிட்டு பாருங்க!
Morning Quotes : வாழ்நாள் முழுவதும் இரும்புச்சத்து குறைபாடே வராது! தினமும் இந்த ரசம் மட்டும் சாப்பிட்டு பாருங்க!

முருங்கைக்கீரையில் பல்வேறு உணவுகளை நீங்கள் செய்யமுடியும் என்றாலும், முருங்கைக்கீரை ரசத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை – 2 கைப்பிடியளவு

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு (நறுக்கியது)

இஞ்சி – பூண்டு – ஒரு ஸ்பூன் (தட்டியது)

பட்டை – கிராம்பு – கால் ஸ்பூன் (நுணுக்கியது)

மிளகு – சீரகம் – ஒரு ஸ்பூன் (தட்டியது)

உப்பு – தேவையான அளவு

தக்காளி – 1

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர், சுத்தம் செய்து அலசிய முருங்கைக்கீரை, சின்ன வெங்காயம், இஞ்சி-பூண்டு, பட்டை-கிராம்பு, மிளகு-சீரகம் அனைத்தும் தட்டியது, பெருங்காயத்தூள், உப்பு மற்றும் தக்காளியை கைகளால் நன்றாக கரைத்து சேர்த்துகொள்ளவேண்டும்.

இதை நன்றாக கொதிக்கவிடவேண்டும். அதன் சாறு அனைத்தும் ரசத்தில் இறங்கியவுடன், சூடான சாதத்தில் சூடாக சேர்த்து பரிமாறினால் சூப்பர் சுவையாக இருக்கும்.

சுவை மட்டுமல்ல உங்கள் உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தையும் கொடுத்துவிடும். சளி, இருமலை தீர்த்துவிடும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைத்துவிடும்.

முருங்கைக்கீரையின் நன்மைகள்

சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

கல்லீரல் நோய்களை குணப்படுத்துகிறது.

நரம்பு மண்டல நோய்களைத் தடுக்கிறது.

ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கிறது.

மூட்டு வலியை குணப்படுத்துகிறது.

புற்றுநோயை சரியாக்குகிறது.

சிறுநீரகக் கற்களை கரைக்கிறது.

வீக்கத்தைப்போக்குகிறது.

ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.

ரத்தம் தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.