Morning Quotes : மழை துவங்கிவிட்டாலே குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க முடியாதா? என்ன செய்யலாம்?-morning quotes cant children be allowed to play outside when it starts raining what can be done - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : மழை துவங்கிவிட்டாலே குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க முடியாதா? என்ன செய்யலாம்?

Morning Quotes : மழை துவங்கிவிட்டாலே குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க முடியாதா? என்ன செய்யலாம்?

Priyadarshini R HT Tamil
Sep 17, 2024 05:40 AM IST

Morning Quotes : மழை துவங்கிவிட்டாலே குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க முடியாதா? என்ன செய்யலாம் என்று பாருங்கள்.

Morning Quotes : மழை துவங்கிவிட்டாலே குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க முடியாதா? என்ன செய்யலாம்?
Morning Quotes : மழை துவங்கிவிட்டாலே குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க முடியாதா? என்ன செய்யலாம்?

உள்புற விளையாட்டுகள்

உங்கள் வீட்டில் ஒரு அறை அல்லது ஹாலையே மாற்றிக்கொள்ளலாம். அதில் சேர், தலையனை என வைத்து அங்கு சாகச விளையாடும் இடம் ஒன்றை செட் செய்துவிடுங்கள். தலையணை, சேர்கள் மற்றும் விளையாட்டு பொருட்களை உபயோகித்து, அந்த இடத்தை தயார் செய்து, நீங்கள் டேபிளுக்கு அடியில் சென்று விளையாடுவது, குஷன்களில் குதித்து விளையாடுவது போன்றவற்றை செய்யுங்கள். உங்கள் குழந்தைகளை பரபரப்பாகவும், அவர்களின் திறன்களை வளர்க்கவும் இது ஒருமுறை. இதனால் அவர்கள் நன்றாக விளையாட முடியும்.

டூ இட் யுவர்செல்ஃப் மற்றும் கிராஃப்ட்கள்

உங்கள் குழந்தைகளின் கற்பனைத்திறன் வளரவேண்டுமெனில், அவர்களுக்கு கிராஃப்ட் கார்னரை அமைத்துக்கொடுங்கள். பேப்பர், கிரையான்கள் மற்றும் கம் என அனைத்தையும் ஒன்று சேர்த்து அவர்களே வரையக்கூடிய கலை பொருட்களை உருவாக்குங்கள். அது ஒரு பெயின்டிங்காக இருக்கலாம் அல்லது பேப்பரை வைத்து ஓரிகாமியில் செய்யும் விலங்கு, பொம்மை உருவங்களாக இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் குடும்பம் குறித்த ஸ்கிராப் புத்தகத்தை உருவாக்கலாம். கலை மற்றும் கிராஃப்ட்களாக அவை இருக்கலாம். எதுவாக இருந்தாலும் உங்கள் குழந்தைகளின் கிரியேட்டிவிட்யை அவை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும்.

ஒன்றிணைந்து பேக்கிங்

மழைக்காலங்கள் நீக்ஙள் உங்கள் குழந்தைகளுக்கு சமையல் கற்றுத்தர ஏற்ற காலம் ஆகும். எனவே அவர்களுக்கு பேக்கிங் கற்றுக்கொடுக்கலாம். ஒரு அகண்ட பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து அவர்களை கலக்க வைத்து, பேக் செய்யலாம். குக்கிகள், கப் கேக்குகள், வீட்டிலே செய்யக்கூடிய பீட்சாக்கள் என நீங்கள் செய்யலாம். இது அவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக மட்டும் இருக்காது. அவர்களுக்கு கற்றும் தரும். அவர்கள் பொருட்களை அளப்பது அவர்களுக்கு கணக்குத்திறன்களை அதிகரிக்கும். அவர்கள் பேக் செய்தவற்றை அலங்கரிக்கும்போது அவர்களின் கற்பனைத்திறக் வெளிப்படும்.

வீட்டுக்குள்ளே கோட்டை

வீட்டுக்குள்ளே கோட்டை கட்ட முடியுமா? சோபாவில் உள்ள குஷன்கள், போர்வைகள் மற்றும் மரச்சாமான்கள் என அனைத்தையும் சேர்த்து ஒரு அழகிய கோட்டையை வீட்டுக்குள்ளே உருவாக்குங்கள். நீங்கள் கோட்டையை கட்டி முடித்தபின், அதில் உட்கார்ந்து புத்தகம் வாசிக்க அல்லது கதைகள் சொல்ல அல்லது சிறிய படங்கள் பார்க்க என இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இதுதான் மழை வெளியில் அடித்துக்கொட்டிக்கொண்டிருக்கும்போது உள்புறத்தில் குழந்தைகளை விளையாட வைக்க சிறந்த தேர்வு. அதிலே அனைத்தும் முடிந்துவிடும்.

தேடுதல் வேட்டை

நீங்கள் உங்கள் வீட்டுக்குள்ளே சில பொருட்களை ஆங்காங்கே மறைத்து வைத்து விடுங்கள். அவர்கள் அதை கண்டுபிடிக்கவேண்டும். அவர்களுக்கு சில வழிமுறைகளைக் காட்டி கண்டுபிடிக்க வையுங்கள். இது அவர்களின் மூளை சுறுசுறுப்படையச் செய்யும். இதற்காக நீங்கள் வெளியே சென்று விளையாட வேண்டாம். இதனால் உங்கள் குழந்தைகளுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறன் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

விளையாட்டுகள் மற்றும் பசில்கள்

செஸ் போர்ட், கேரம் போர்ட் அல்லது தாயம், பரமபதம் போன்ற உள்புற விளையாட்டுகள். இவையெல்லாம் உங்கள் குழந்தைகளின் நேரத்தையும் போக்கும். அவர்கள் வெளியில் செல்லவேண்டும் என்று அடம்பிடிக்க மாட்டார்கள் அல்லது அவர்களுக்கு பசில்கள் கொடுத்து அவற்றை தீர்க்க நேரம் ஒதுக்குங்கள். இவற்றில் அனைவரும் சேர்ந்துகொள்ளலாம். மேலும் இதனால் அவர்களுக்கு குழுத்திறன், சிந்தனை மற்றும் பொருமை ஆகியவை அதிகரிக்கும்.

டான்ஸ் பார்ட்டி

வீட்டுக்குள்ளே இசையை இசைக்க வைத்து டான்ஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யுங்கள். குழந்தைகள் ஆடும்போது அவர்களுக்கு அது மகிழ்ச்சியை மட்டும் கொடுப்பதில்லை. அவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கும். அவர்களின் கலோரிகள் எரிக்கப்படவும் உதவும். உங்கள் குழந்தைகள் ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம், மகிழலாம். அவர்கள் குழுவாக சேர்ந்து ஆட, தனியாக ஆட என அவர்களுக்கு தேர்வுகளைக் கொடுங்கள். அவர்களுக்கு அது பல்வேறு திறன்களை வளர்க்க உதவும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.