Morning Quotes : அதிகாலையில் துயில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்! இத்தனை சுவாரஸ்யமாக இருக்குமா?
Morning Quotes : அதிகாலையில் துயில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்! இத்தனை சுவாரஸ்யமாக இருக்கும் எனில் நாளை முதல் முயற்சித்து பாருங்களேன்.

நீங்கள் அதிகாலையிலே எழுந்துவிடுவது உங்களுக்கு எத்தனை நன்மைகளை தருகிறது என்று பாருங்கள். மேலும் நீங்கள் அதிகாலையிலே ஏன் எழுந்திருக்கவேண்டும் என்றும் தெரிந்துகொள்ளுங்கள். வெற்றியாளர்கள் பெரும்பாலானோர், அதிகாலையில் துயில் எழுபவர்களாகத்தான் இருப்பார்கள். நீங்கள் பரிசோதித்து வேண்டுமானால் பார்க்கலாம். அதிகாலையில் துயில் எழுபவர்களுக்கு பல உடல் மற்றும் மன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என்பது உண்மைதான். விடிந்து நீண்டநேரம் வரை படுக்கையில் படுத்திருப்பது என்பது நல்லதல்ல. நீங்கள் அதிகாலையில் துயில் எழுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொண்டால் இனிமேல் தினமும் அதிகாலையில் கண் விழித்துவிடுவீர்கள். அதிகாலை துயில் எழுபவர்களுக்கு அந்த ஒரு நாள் இரண்டு நாளுக்கு சமம். நீங்கள் அத்தனை வேலைகளை செய்து முடித்துவிடலாம்.
அமைதியான, பரபரப்பில்லாத காலைப்பொழுது
காலைப்பொழுது எப்போதும் அமைதியுடனும் பரபரப்பின்றியும் இருக்கும். நீங்கள் அதிகாலையில் துயில் எழுந்துவிட்டீர்கள் என்றால் போதும் எவ்வித அவசரமும் இல்லாமல் உங்கள் நாளை துவங்கலாம். மெதுவாக, அமைதியான காலைப் பொழுதுகள், உங்களின் மன அழுத்தத்தை குறைக்கிறது. உங்களுக்கு வேலைகள் குறித்து பரபரப்பாக்காமல் பதற்றத்தைe குறைக்க உதவுகிறது.
நடைப்பயிற்சியுடன் உங்கள் நாளை துவங்குங்கள்
காலையில் எழுந்து நடை பயிற்சி செய்வது, குறிப்பாக காலையில் வெளியில் சென்று நடைப்பயிற்சி செய்வது உங்களுக்கு ஆற்றலை வழங்கும் சிறந்த வழிகளுள் ஒன்று. உங்களுக்கு மகிழ்ச்சியையும் தரக்கூடியது. நீங்கள் நடக்கும்போது எண்டோஃபின்கள் வெளிப்படுத்தப்படும். அவை உங்களின் மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்கும். அதிகாலையில் துயில் எழுந்து உடற்பயிற்சி செய்பவர்கள், காலையில் வேலைகளில் எளிதாக ஒட்டிக்கொள்வார்கள். அது அவர்களின் உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.