Moong Bean Biriyani : ஹெல்தியான லன்ச் பாக்ஸ் ரெசிபி! பாசிப்பயிறிலே செய்யலாம் பிரியாணி! சுவையும் சூப்பராக இருக்கும்!-moong bean biriyani healthy lunch box recipe biryani can be made in moong bean tastes great too - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Moong Bean Biriyani : ஹெல்தியான லன்ச் பாக்ஸ் ரெசிபி! பாசிப்பயிறிலே செய்யலாம் பிரியாணி! சுவையும் சூப்பராக இருக்கும்!

Moong Bean Biriyani : ஹெல்தியான லன்ச் பாக்ஸ் ரெசிபி! பாசிப்பயிறிலே செய்யலாம் பிரியாணி! சுவையும் சூப்பராக இருக்கும்!

Priyadarshini R HT Tamil
Sep 15, 2024 01:35 PM IST

Moong Bean Biriyani : ஹெல்தியான லன்ச் பாக்ஸ் ரெசிபியாக பாசிப்பயிறிலே செய்யலாம் பிரியாணி. சுவையும் சூப்பராக இருக்கும். ஆரோக்கியமும் நிறைந்தது.

Moong Bean Biriyani : ஹெல்தியான லன்ச் பாக்ஸ் ரெசிபி! பாசிப்பயிறிலே செய்யலாம் பிரியாணி! சுவையும் சூப்பராக இருக்கும்!
Moong Bean Biriyani : ஹெல்தியான லன்ச் பாக்ஸ் ரெசிபி! பாசிப்பயிறிலே செய்யலாம் பிரியாணி! சுவையும் சூப்பராக இருக்கும்!

இதில் கலோரிகளும், அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் முளை கட்டாததைவிட அதிகம். ஃபைடிக் அமில அளவு முளைகட்டும்போது குறைகிறது. அது உடலுக்கு தேவையற்றது. இது உடலில் சிங்க், கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை குறைக்கிறது.

அதிக ஆன்டிஆக்ஸிடன்ட் அளவுகள் நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை குறைக்கிறது.

வெயில் காலத்தில் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கிறது.

உடலில் சேரும் கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்தை காக்கிறது.

பொட்டாசிய, மெக்னீசிய, நார்ச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

செரிமான உறுப்புக்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

பசியை கட்டுப்படுத்தி, எடை குறைப்புக்கு உதவுகிறது.

ஆரோக்கியமான கர்ப்ப காலத்துக்கு உதவுகிறது.

உடலில் தேவைக்கு அதிகமாக சுரக்கும் பித்தத்தை குறைக்கக்கூடியது

மனஅழுத்தத்தை குறைக்கக்கூடியது.

எளிதாக உங்கள் உணவில் சேர்க்கலாம்.

இதை சாலட், சூப், குழம்பு என எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது கொஞ்சம் இனிப்பாக இருக்கும். இதில் இனிப்பு கஞ்சி கூட வெல்லம் சேர்த்து செய்யலாம். இதை ஊறவைத்து வேகவைத்து சமைக்க வேண்டும். இதை முளைக்கட்டி பச்சையாகவும் சாப்பிடலாம். இதில் சுவை நிறைந்த பிரியாணியும் சாப்பிடலாம். பச்சைபயிறில் பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

அரிசி – ஒரு கப்

பச்சைப்பயிறு – கால் கப்

தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 4

ஏலக்காய் – 1

ஸ்டார் சோம்பு – 1

பிரியாணி இலை – 1

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கருவேப்பிலை – ஒரு கொத்து

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

புதினா – கைப்பிடியளவு

மல்லித்தழை – கைப்பிடியளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்கவேண்டும்.

பின்னர் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். கறிவேப்பிலை, புதினா சேர்த்துக்கொள்ளவேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கி, வெங்காயம் பொன்னிறமானவுடன், தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் ஊறவைத்த அரிசியை சேர்த்து கிளறிவிட்டு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைத்தால் பாசிப்பயறு பிரியாணி தயார். குக்கரில் வைத்தால், குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவேண்டும்.

இது வித்யாசமான சுவை கொண்ட பிரியாணி இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காயம், தக்காளி, வெள்ளரி ரைத்தா, காய்கறி குருமா, மட்டன், சிக்கன் கிரேவி என எதுவும் பொருத்தமானதுதான். இதை குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிலும் வைத்துவிடலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் ருசிக்கத்தூண்டும் சுவை நிறைந்ததாக இருக்கும். இதை செய்வதும் மிக எளிது. பணியின் பரபரப்புக்கு இடையில் இதை எளிதாக செய்துவிட முடியும் என்பதால் இது மிகவும் பிரண்ட்டிலியான பிரியாணி.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.