தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Migraine Remedy : ஒற்றை தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இரண்டே பொருள் போதும்! இரண்டே வாரத்தில் தீர்வு!

Migraine Remedy : ஒற்றை தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இரண்டே பொருள் போதும்! இரண்டே வாரத்தில் தீர்வு!

Priyadarshini R HT Tamil
Jun 23, 2024 08:21 AM IST

Migraine Remedy : ஒற்றை தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இரண்டே பொருள் போதும்! இரண்டே வாரத்தில் தீர்வு!

Migraine Remedy : ஒற்றை தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இரண்டே பொருள் போதும்! இரண்டே வாரத்தில் தீர்வு!
Migraine Remedy : ஒற்றை தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இரண்டே பொருள் போதும்! இரண்டே வாரத்தில் தீர்வு!

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

ஒற்றைத்தலைவலி

தலை வலி வந்தாலே நம்மால் தாங்க முடியாது. அதிலும் ஒரு புறத்தில் தலை வலி என்றால், கட்டாயம் மிகவும் சிரமமாக இருக்கும். ஒற்றை தலைவலி ஏற்படும்போது அதனுடன் வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படும்.

ட்ரெண்டிங் செய்திகள்

சிலருக்கு ஒளி, ஒலியை கேட்பதும், பார்ப்பதிலும் பிரச்னைகள் ஏற்படும். ஒற்றைத்தலைவலி பல மணி நேரங்கள் முதல் ஒரு சில நாட்கள் வரை ஏற்படும். வலி கடுமையானதாக இருக்கும். இது உங்கள் தினசரி நடவடிக்கைகளை பாதிக்கும்.

ஒற்றைத்தலைவலியால் கண் கோளாறுகள் மற்றும் சோர்வு, முகத்தில் ஒரு பக்கத்தில் அல்லது கை மற்றும் கால்களில் ஒரு புறத்தில் கூச்ச உணர்வு ஏற்படும். இதற்கு மருந்துகள் உதவும். ஆனாலும் சில வீட்டு மருத்துவ முறைகளையும் பின்பற்றவேண்டும்.

அறிகுறிகள்

ஒற்றை தலைவலி வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் உங்கள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அது உங்களுக்கு ஒற்றை தலைவலி வரப்போகிறது என்பதை முன்னரே உணர்த்துவதாக இருக்கும்.

மலச்சிக்கல்

மனமாற்றங்கள், மனஅழுத்தம் முதல் பரவச உணர்வு வரை ஏற்படும்

உணவு சாப்பிடும் ஆர்வம்

கழுத்து திருப்ப முடியாமல் விறைத்துக்கொள்வது

அடிக்கடி சிறுநீர் கழிப்புது

அடிக்காடி கொட்டாவி விடுவது

நீர்க்கட்டி ஆகியவை ஏற்படும்.

ஒற்றை தலைவலியைப் போக்குவதற்கான வீட்டு தீர்வு

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 10

முள்ளங்கி – 1

செய்முறை

சின்னவெங்காயத்தை தோல் நீக்கி, உரலில் தட்டி துணியில் வடிகட்டி சாறு பிழிந்துகொள்ள வேண்டும். இந்த சாறை கால் டம்ளர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முள்ளங்கியை தோல் சீவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதையும் துண்டுகளாக்கி உரலில் சேர்த்து தட்டி சாறு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கால் டம்ளர் சாறை எடுக்கவேண்டும்.

இரண்டையும் ஒன்றாக்கி ஒரு மணி நேரம் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இதை ஒரு வாரம் செய்ய வேண்டும்.

ஒரு வாரத்திலே உங்கள் தலைவலி குறையத்துவங்கும். அடுத்து ஒரு வாரம் இடைவெளிவிட்டு, அதற்கு அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இப்படி இரண்டு வாரங்கள் எடுத்துக்கொண்டாலே போதும் ஒற்றை தலைவலி காணாமல் போய்விடும். இதை உங்களுக்கு எப்போதெல்லாம் ஒற்றை தலைவலி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சாப்பிடவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.