தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Venus: சூப்பர் வாழ்க்கை தரும் சுக்கிரன் செல்வத்தின் அதிபதியாக மாறும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்

Lord Venus: சூப்பர் வாழ்க்கை தரும் சுக்கிரன் செல்வத்தின் அதிபதியாக மாறும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 22, 2024 05:39 PM IST

Lord Venus: சுக்கிர பகவான் கடந்த மே 27ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் தனது இடத்தை மாற்றினார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சுக்கிரனின் அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கப் போகின்றது.

சூப்பர் வாழ்க்கை தரும் சுக்கிரன் செல்வத்தின் அதிபதியாக மாறும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்
சூப்பர் வாழ்க்கை தரும் சுக்கிரன் செல்வத்தின் அதிபதியாக மாறும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்

அந்த வகையில் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் கடந்த மே 27ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் தனது இடத்தை மாற்றினார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சுக்கிரனின் அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் முழுமையாக கொடுக்க போகின்றது. மிகவும் சிறப்பான காலமாக இது உங்களுக்கு இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

வியாபாரத்தின் அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக உங்களது நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கைக்கு வராமல் இருந்த பணம் உங்களை தேடி வரும். 

நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையின் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் ஏராளமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுடைய இலக்கு உங்களுக்கு அதிக யோகத்தை பெற்று தரும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கல்யாண வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9