Aspirant Mental Health: போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களா நீங்கள்?.. மன அழுத்தத்தை நிர்வகிக்க சில டிப்ஸ்!
Aspirant Mental Health: போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் சில டிப்ஸ் குறித்து பார்ப்போம்.

Aspirant Mental Health: கல்வியின் சிறப்புக்கும் எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்கும் நமது தொடர்ச்சியான தேடலில், நமது மன நலனுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவம் பெரும்பாலும் மறைக்கப்படுகிறது; மறந்துபோகிறது. தேர்வுகள், பணிகள் மற்றும் ஆசைகளின் சலசலப்புக்கு மத்தியில், நமது மன நலனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நம் அன்றாட வாழ்க்கையை ஆழமாக பாதிக்கும். குறிப்பாக கல்வி, அதனுடன் இணைந்த பொறுப்புகளின் மகத்தான அழுத்தங்களை எதிர்கொள்ளும்போது அது நம் வாழ்க்கையைப் பாதிக்கிறது.
மன ஆரோக்கியத்தை எப்படி கட்டிக் காப்பாத்துவது?
மன ஆரோக்கியம் தொடர்பாக குருகிராமில் உள்ள ஐ.ஐ.எல்.எம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் (டாக்டர்) பத்மகளி பானர்ஜி இந்துஸ்தான் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில், "நம்பிக்கையானது மனச்சோர்வை முறியடிக்கிறது. விவேகம், முன்னேற்றம், நுண்ணறிவு மற்றும் நேர்மறையான விளைவுகளுக்கான நம்பிக்கையை நோக்கிய ஒரு முக்கிய படியாகும். வாழ்க்கை சூழ்நிலைகளை திறம்பட கையாள்வதற்கும், நம்மை வளர்ப்பதற்கும், நம்பிக்கையுடன் முன்னேறும் போது எந்தவொரு துன்பங்களிலிருந்தும் இரட்டிப்பு உத்வேகத்துடன் மீண்டெழ முடியும்.
இலக்கு நிர்ணயம் இளைஞர்களுக்கு இன்றியமையாதது. ஒரு குறிப்பிட்ட திசையை நிர்ணயித்து பயணப்பட்டால், இளம் சாதனையாளர்கள் ஒருபோதும் ஊசலாட மாட்டார்கள். இதனால் கவலை மற்றும் மன உளைச்சல் தானாகவே வராது. இலக்கு நிர்ணயம் யதார்த்தமானதாகவும், நடைமுறையில் அடையக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இதனால் இளம் சாதனையாளர்கள் வழியில் முன்னேற்றத்தைக் கொண்டாடவும் மகிழ்ச்சியாக உணரவும் முடியும்.
இளம் சாதனையாளர்கள் மன உளைச்சல் மற்றும் சங்கடத்திலிருந்து விடுபட சிக்கல் தீர்க்கும் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரச்னைகள் எப்போதும் இருக்கும். அவை சிக்கல் தீர்க்கும் திறன்களால் சாதுரியமாக தீர்க்கப்பட வேண்டும். இந்த உத்திகளை இணைப்பதன் மூலம், இளம் சாதனையாளர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்’’ என்றார்.
மன நலக் கவலைகளை நிவர்த்தி செய்வது எப்படி?:
டெல்லியின் வசந்த் குஞ்சில் உள்ள GD கோயங்கா பப்ளிக் பள்ளியின் மூத்த பள்ளி ஆலோசகர் குர்மன்ஜோத் புடாலியா, மனநலக் கவலைகளை நிவர்த்தி செய்ய பின்வரும் உத்திகளைப் பரிந்துரைத்தார். அவையாவன:-
- மனநலத்தைக் கட்டுப்படுத்துவது அனைவருக்கும் முக்கியமானது. குறிப்பாக தனித்துவமான சவால்கள் மற்றும் அழுத்தங்களை எதிர்கொண்டு, இளம் சாதனையாளர்கள் இந்த தடைகளை வெல்வதற்கான படிநிலைகளில் கவனம் செலுத்தி விழிப்புணர்வு பெறுவது அவசியம்.
- இளம் சாதனையாளர்கள் தங்கள் முயற்சிகளில் சிறந்து விளங்க தொடர்ந்து அழுத்தத்தை உணரலாம். கல்வி மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகளுக்கு இடையில் எல்லைகளை நிறுவுவது அவசியம். சுய கவனிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். லட்சியம் போற்றத்தக்கது. இருப்பினும், நம்பத்தகாத இலக்குகளை அமைப்பது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும்.
- யதார்த்தமான இலக்குகள் மதிப்புகள், பலங்கள் மற்றும் முன்னுரிமைகளுடன் சீரமைக்கப்பட வேண்டும்.
- தேவைப்பட்டால் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், மனநல நிபுணர்களின் ஆதரவை நாடுங்கள். உணர்ச்சிகளைச் சமாளிப்பது மற்றும் அனுபவங்களைப் பற்றி பேசுவது மன அழுத்தத்தைக் குறைத்து முன்னேற்றத்தை வழங்கும். இளைஞர்கள் தங்கள் வெற்றிகளை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கொண்டாட ஊக்குவிக்கப்பட வேண்டும். சாதனைகளை மதிப்பிடுவது சுயமரியாதையையும் உந்துதலையும் அதிகரிக்கும்.
- தியானம், ஆழ்ந்த சுவாசம், யோகா போன்ற மனம் நிறைந்த நுட்பங்கள் இளம் சாதனையாளர்களுக்கு மன அழுத்தத்தை சமாளிக்கவும், தற்போதைய தருணத்தில் அடித்தளமாக இருக்கவும் உதவும். மன அழுத்தத்தின் ஆதாரங்களை அடையாளம் காண்பது மன அழுத்தங்களைக் குறைக்க, சமாளிக்க உத்திகளை உருவாக்க உதவும்.
- தேவைப்படும்போது இல்லை என்று சொல்லக் கற்றுக்கொள்வது, தனிநபர்கள் தங்கள் சொந்த நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க உதவுகிறது. பின்னடைவுகளை கற்றல் வாய்ப்புகளாக ஏற்றுக்கொண்டு, வலுவாக மீண்டும் குதிக்க திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். நினைவில் கொள்ளுங்கள், தோல்விகள் வெற்றியை நோக்கிய பயணத்தின் இயல்பான பகுதியாகும்’’ எனத் தெரிவித்தார்.
டாப்ரேங்கர்ஸின் ஆலோசனை உளவியலாளர் நேஹா திரிபாதி கூறுகையில், "எதிர்மறையான செய்திகள், சமூக ஊடக ஒப்பீடுகள், அதிகப்படியான போட்டியைத் தவிர்ப்பதன் மூலம் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதைக் குறைக்கலாம்.
திட்டங்களை வகுப்பது மற்றும் மன நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பது நேர்மறையான மனநிலையைப் பராமரிக்க உதவும். மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றை அதிகமாக உணர்ந்தால் உதவி கேட்க பயப்பட வேண்டாம். பள்ளி ஆலோசகர்கள், போட்டித் தேர்வு சிகிச்சையாளர்கள், உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப ஆதரவைக் கொடுத்தால் அதற்கான வழிமுறைகளையும் வழங்க முடியும்.
மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியம் வெறும் தேர்வுக்கு அப்பாற்பட்டது; முழுமையான வெற்றியை அடைவதற்கு இது ஒரு அடிப்படைத் தேவையாக நிற்கிறது. தனிப்பட்ட ஆசைகள், தொழில்முறை முயற்சிகள் எதுவாக இருந்தாலும், மன நலனை வளர்ப்பது முக்கியமானது. இது புதுமை மற்றும் செயல்திறனுக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது. நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளபடி, மன ஆரோக்கியத்தில் முதலீடு செய்வது ஒரு முக்கியமான அர்ப்பணிப்பாகும்.

டாபிக்ஸ்