தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  International Yoga Day 2024: யோகா மீது காதல் கொண்ட ஹாலிவுட் பிரபலங்கள்..! க்யூட் யோகா புகைப்படங்கள்

International Yoga Day 2024: யோகா மீது காதல் கொண்ட ஹாலிவுட் பிரபலங்கள்..! க்யூட் யோகா புகைப்படங்கள்

Jun 21, 2024 08:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 21, 2024 08:45 PM , IST

  • ஹாலிவுட் பிரபலங்களான ஜெனிபர் அனிஸ்டன், மிராண்டா கெர், மைலி சைரஸ் உள்பட பலரும் யோகா பயிற்சியின் மீது ஆர்வம் மிக்கவர்களாக உள்ளனர். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவை பூர்வீகமாக கொண்டிருக்கும் யோகா மீது ஆர்வம் கொண்டிருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட உடல், மன, ஆன்மிக பயிற்சியாக கருதப்படும் யோகா பயிற்சி தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இதன் பின்பற்றும் உலக பிரபலங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யோகா பற்றி உலகம் முழுவதும் நன்மை அறியப்பட்டவர்கள் கூறும் கருத்துகளை பார்க்கலாம்

(1 / 8)

ஹாலிவுட் பிரபலமான ஜெனிபர் அனிஸ்டன் நீண்ட காலமாக யோகா பயிற்சியை மேற்கொள்பவராக உள்ளாராம். 2005 முதல் யோகா பயிற்சிகளை செய்து வரும் அவர், " உடலை மறுசீரமைப்பு செய்யவும், உடலில் ஏதேனும் தசை ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்யவும் மனதை அமைதிப்படுத்தவும், சுவாசத்தை மேம்படுத்தவும் யோகா பயிற்சி சிறந்ததாக இருப்பதாக தெரிவித்துள்ளார்

(2 / 8)

ஹாலிவுட் நடிகையான கேட் ஹட்சன் யோகா மீது காதல் கொண்டவராக உள்ளாராம். யோகா தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாவில், நேற்றைய தினம் #InternationalDayOfYoga மற்றும் நான் விடுமுறையில் இருந்ததால்  எனது விருப்பங்களில் ஒன்றாக இருப்பது பற்றி பதிவிட மறந்துவிட்டேன். எனது கர்ப்ப காலத்தில் சிறந்த ஆதரவாக யோகா இருந்தது. வளர்ந்து வரும் வயிறு மற்றும் அழகான உயிருடன் இணைக்கும் பயிற்சியாக இருக்கும் யோகா எனக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்

(3 / 8)

ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ் யோகா பயிற்சி மேற்கொள்வதுடன், யோகா ஸ்டுடியோ ஒன்றை அமைத்து முதலீடு செய்துள்ளார். SARVA எனப்படும் இந்திய அடிப்படையிலான யோகா மற்றும் வெல்னஸ் ஸ்டார்ட்அப்பாக இருப்பதாக தனது ஸ்டுடியோ குறித்து தெரிவித்துள்ளார். "எனது வழக்கமான யோகா பயிற்சியால் நான் தனிப்பட்ட முறையில் பயனடைந்துள்ளேன், மேலும் அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நம்புகிறேன். SARVAவால் பெறும் உற்சாகம் நம்பிக்கைக்குரியதாக உள்ளது" என்று கூறியுள்ளார்

(4 / 8)

ஹாலிவுட் சூப்பர் மாடல் ஜிகி ஹடிட் சில எளிய யோகா ஆசனங்களைப் பயிற்சி செய்யும் விடியோவை ஒருமுறை பகிர்ந்து லைக்குகளை குவித்தார்

(5 / 8)

ஹாலிவுட் பாடகியான மைலி சைரஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு யோகா பயிற்சியில், அஷ்டாங்க ஆசனத்தில் தேர்ச்சி பெற்றார். அவர் தனது நிகழ்ச்சியில் ஜிம்மி ஃபாலனுக்கு பாடம் நடத்தினார்

(6 / 8)

அயர்ன் மேன் பட நடிகை க்வினெத் பேல்ட்ரோவும் யோகா ரசிகராக இருக்கிறார். அவர் அமெரிக்காவுக்கு யோகாவைக் கொண்டு வந்திருக்கலாம் என்று பரிந்துரையும் செய்தார். அப்போது அவருக்கு சில எதிர்ப்புகளும் எழுந்தன 

(7 / 8)

சூப்பர் மாடல் மிராண்டா கெர் அடிக்கடி பல்வேறு யோகா போஸ்களை முயற்சிக்கும் படங்களை பகிர்ந்து யோகா பயிற்சி மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்

(8 / 8)

மற்ற கேலரிக்கள்