தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Menstrual Disc : மாதவிடாய்க்கு மென்ஸ்ட்ரூவல் டிஸ்க் பயன்படுத்துவது எப்படி? அவை கப்களைவிட சிறந்ததா?

Menstrual Disc : மாதவிடாய்க்கு மென்ஸ்ட்ரூவல் டிஸ்க் பயன்படுத்துவது எப்படி? அவை கப்களைவிட சிறந்ததா?

Priyadarshini R HT Tamil
Sep 22, 2023 10:45 AM IST

Menstrual Disc : சானிட்டரி பேட் மற்றும் டாம்பான்களைவிட சிறந்தது மென்ஸ்ட்ரூவல் டிஸ்க்குகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மென்ஸ்ட்ரூவல் டிஸ்க் பயன்கள்
மென்ஸ்ட்ரூவல் டிஸ்க் பயன்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இது 61 மிலி அளவு உதிரப்போக்கையும் தாங்குகிறது. மற்றவை அனைத்தும் 20 முதல் 50 மிலி அளவு உதிரப்போக்கை மட்டுமே தாங்குகிறது.

மென்ஸ்ட்ரூவல் டிஸ்க் என்றால் என்ன?

டாம்பான்கள் மற்றும் சானிட்டரி பேட்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கை உறிஞ்சும் தன்மை கொண்டது. ஆனால் மென்ஸ்ட்ரூவல் டிஸ்குகள் அவற்றை சேகரிக்கும் தன்மை கொண்டது. மருத்துவ உபயோகத்துக்கான சிலிக்கான்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. வட்ட வடிவமான மாதவிடாய்க்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும்.

எப்படி பயன்படுத்துவது?

கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

டிஸ்க்கை அரையாக மடித்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் பெண்ணுறுப்பில் மடித்த டிஸ்க்கை உள்ளே வைத்துக்கொள்ள வேண்டும். பின்புறக் கீழ் பகுதியை நோக்கி கருப்பை வாயை அது அடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதை உள்ளே வைத்தவுடன், எந்த லீக்குகளும் ஆகாத வண்ணம் சரியாக பொருத்த வேண்டும்.

மென்ஸ்ட்ரூவல் டிஸ்குகளை எடுப்பது எப்படி?

கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

மென்ஸ்ட்ரூவல் டிஸ்குகளின் அடிப்பாகத்தில் சிறிய தடிப்பான அமைப்பு இருக்கும். அதை பிடித்து எடுக்க வேண்டும்.

அந்த தடித்த பகுதியை பிடித்து மெதுவாக எடுக்க வேண்டும். கசிவை தடுக்க அதை சரிசெய்து வைக்கவேண்டும்.

சேகரிக்கப்பட்ட மாதவிடாய் உதிரத்தை கழிவறையில் கொட்டிவிடவேண்டும்.

நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

உங்களின் உதிரப்போக்கு அளவுக்கு ஏற்ப நீங்கள் இதை அணிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு பிடித்த மாடல் மற்றும் பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இதை நீங்கள் அதிகபட்சமாக 12 மணி நேரம் அணிந்திருக்கலாம். ஆனால் எப்போது உங்களின் உதிரப்போக்கு அளவை கண்காணித்து மாற்றுவது அவசியம். தேவைப்படும்போது இதை நீங்கள் காலி செய்துவிட்டு மீண்டும் பொருத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் லீக்காவது உள்ளிட்ட அசௌகரியங்கள் ஏற்படாது.

டாம்பான்கள் மற்றும் சானிட்டரி நாப்கீன்களைவிட அதிக அளவு உதிரப்போக்கை தாங்குகிறது. இதை நீங்கள் மற்றவற்றைவிட நீண்ட நேரம் அணிந்துகொள்ள முடியும். எவ்வித கசிவும் ஏற்படாது. மாதவிடாய்க்கு நீங்கள் பயன்படுத்தும் எந்தவிதமான பொருளும் உங்களின் சௌகர்யத்தை பொறுத்து மாறுபடும். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை தேர்ந்தெடுப்பார்கள். எனவே உங்களுக்கு உகந்தது எது என்று பார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்