தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Masturbation : சுய இன்பம் : கர்ப்ப காலத்தில் செய்யலாமா? புராஸ்டேட் புற்றுநோயை குறைக்குமா? – விளக்கம் இதோ!

Masturbation : சுய இன்பம் : கர்ப்ப காலத்தில் செய்யலாமா? புராஸ்டேட் புற்றுநோயை குறைக்குமா? – விளக்கம் இதோ!

Priyadarshini R HT Tamil
May 07, 2024 10:24 AM IST

Masturbation : செக்ஸ்வல் இன்பத்துக்காக நாமே நமது பிறப்புறுப்புக்களை தூண்டுவது நல்லதா கெட்டதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Masturbation : சுய இன்பம் : கர்ப்ப காலத்தில் செய்யலாமா? புராஸ்டேட் புற்றுநோயை குறைக்குமா? – விளக்கம் இதோ!
Masturbation : சுய இன்பம் : கர்ப்ப காலத்தில் செய்யலாமா? புராஸ்டேட் புற்றுநோயை குறைக்குமா? – விளக்கம் இதோ!

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்புறுப்புகளை தூண்டு தங்களுக்கு தாங்களாவே செக்ஸ்வல் இன்பத்தை அளித்துக்கொள்வது சுய இன்பம் எனப்படுகிறது. பெரும்பாலானவர்கள் அதை செய்வார்கள் மற்றும் சிலர் அதுகுறித்து அதிகம் பேசுவார்கள். பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள கிளிட்டோரியஸ் என்ற உறுப்பை தூண்டுவதன் மூலம் பெண்களும், பீனிஸை தூண்டுவதன் மூலம் ஆண்களும் சுய இன்பம் பெறமுடியும்.

ஆர்கஸம் கிடைத்தவுடன் நிறுத்தப்படுகிறது. இது செக்ஸ்வல் திருப்தியை மட்டும் கொடுக்கவில்லை. மனஅழுத்தத்தை குறைக்கிறது. மனநிலையை மாற்றுகிறது. நல்ல உறக்கத்துக்கும் வழிவகுக்கிறது.

சுய இன்பம் குறித்து சில எதிர்மறை எண்ணங்கள் உள்ளது. இதுகுறித்த கட்டுக்கதைகளும் நிறைய உள்ளது. அதனால் இதுகுறித்து பேசுவது அல்லது செய்வது குற்றமாகவும், அவமானமாகவும் கருதப்படுகிறது. சில கலாச்சாரங்களில் இது உடல் மற்றும் மனரீதியான அவமானமாக கருதப்படுகிறது.

செக்ஸ்வல் இன்பத்துக்காக நாமே நமது பிறப்புறுப்புக்களை தூண்டுவது நல்லதா கெட்டதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

இது பொதுவானது என்றும், 65 சதவீதம் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் இதைச் செய்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. சுயஇன்பம் செய்வதற்கு வயது மற்றும் பாலினம் வேறுபாடு இல்லை.

சுயஇன்பம் ஆழ்ந்த உறக்கம், மனஅழுத்தத்தில் இருந்து நிவாரணம், மனநிலை மாற்றம், வலி நிவாரணம், செக்ஸ்வல் திருப்தி என பல்வேறு நன்மைகளைக் கொடுத்தாலும், அது சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதான், அது இந்த சுயஇன்பத்துக்கும் பொருந்தும். சுயஇன்பத்தை அளவாக அனுபவிக்கும்போது, அது உங்களுக்கு மேற்கண்ட நன்மைகளைக் கொடுக்கிறது. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது.

உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. உங்கள் உறவில் எதிர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. சமூக ரீதியாக இதற்கு எதிர்ப்புகள்தான் அதிகம் உள்ளது என்பதால், இது அவமானம் மற்றும் குற்றவுணர்வைத்தரும்.

சுயஇன்பம் செய்யும்போது கன்னித்தன்மை இழக்கும் அபாயம் உள்ளது. உடல் மற்றும் மனநலக்கோளாறை ஏற்படுத்தும். பாலியல் இன்பத்தை குறைக்கும் மற்றும் ஆரோக்கியமற்றது போன்றவையெல்லாம் கட்டுக்கதைகள் தான்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் சுயஇன்பம் கொள்ளலாமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் சுயஇன்பம் கொள்வது பாதுகாப்பான ஒன்றுதான். இது இயல்பான ஒரு செக்ஸ்வல் வெளிப்பாடுதான். ஆனால் உங்கள் மருத்துவர் வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தால், நிறுத்திக்கொள்ளுங்கள்.

எனவே இதுகுறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டியது நல்லது. உங்களுக்கு ஏதேனும் அசவுகர்யங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது. ஆனால் சுயஇன்பம் கர்ப்ப காலத்தில் கருவுக்கும், கர்ப்பத்துக்கும் எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது. சுயஇன்பமோ அல்லது உடலுறவோ உடலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அதற்கு கருப்பையில் போதிய அளவு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்படவேண்டும். கருப்பைவாயில் சுரக்கும் திரவங்களும் கருவை காக்கும் அரணாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் சுயஇன்பம் கொள்ளும்போது பெண்கள் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன?

நீங்கள் கர்ப்பமாக இருந்தால் சுயஇன்பம் கொள்ளும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் மருத்துவர் சுயஇன்பம் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தாலோ அல்லது உங்களுக்கு உதிரப்போக்கு இருந்தாலோ நீங்கள் சுயஇன்பம் கொள்ளக்கூடாது.

செக்ஸ் டாய்ஸ்கள் பயன்படுத்தும்போது, எச்சரிக்கையுடனும், அவற்றை உள்ளே செலுத்தாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.

உங்கள் செக்ஸ் டாய்ஸ் குறித்து கவனமாக இருங்கள். அவற்றை சுத்தமாக பராமரியுங்கள். அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.

சுயஇன்பம் ஆண்களுக்கு ஆண்குறி புற்றுநோய் ஆபத்தை குறைக்குமா?

மாதத்தில் 21 நாட்கள் விந்துக்களை வெளியேற்றினால், ஆண்குறியில் ஏற்படும் புற்றுநோள் ஆபத்தை குறைக்காலாம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விந்துக்கள் உடலுறவு அல்லது சுயஇன்பம் இரண்டாலும் வெளியேற்றப்படலாம். இது ஆண்குறி புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.

ஆண்குறியில் உள்ள நச்சுக்களையும், இறந்த செல்களையும் விந்துகள் வெளியேறும்போது வெளியேற்றுப்படுகிறது. எனினும், இதற்கு எண்ணற்ற ஆய்வுகள் தேவை. விந்தணுக்கள் வெளியேறுவதற்கும், ஆண்குறி ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு மேலும் ஆராயப்படவேண்டும்.

சுயஇன்பத்தை தவிர்க்க முடியுமா?

சுயஇன்பம் என்பது ஒருவரின் தனிப்பட்ட தேர்வு. அதை அவர்கள் செய்யாமல் இருப்பதும் அவர்கள் விருப்பம். பெரும்பாலானவர்களுக்கு சுயஇன்பம் என்பது வழக்கமான மற்றும் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கலாம். சிலர் துணை இல்லாமல் சுயஇன்பத்தில் ஈடுபடுவார்கள் அல்லது சிலருக்கு துணை அருகில் இருக்கமாட்டார்கள் என்பதால் சுயஇன்பம் பெறுவார்கள்.

எனினும், இது அன்றாட வாழ்க்கையில் தலையிடவே செய்கிறது. துன்பம் தருகிறது, கட்டாயம் செய்யவேண்டிய நிலைக்கு அழைத்துச் செல்கிறது. இதனால் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே உங்கள் மீதான அக்கறை, உரையாடல் மற்றும் செக்ஸ் குறித்த ஆரோக்கியமான புரிதல் ஆகியவை தேவை.

WhatsApp channel

டாபிக்ஸ்