தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Masala Podi : எல்லா வகை சைவ, அசைவ குழம்புகள்; வறுவல், பொரியல் என அனைத்துக்கும் இந்த மசாலாப்பொடி போதும்!

Masala Podi : எல்லா வகை சைவ, அசைவ குழம்புகள்; வறுவல், பொரியல் என அனைத்துக்கும் இந்த மசாலாப்பொடி போதும்!

Priyadarshini R HT Tamil
Apr 05, 2024 01:16 PM IST

Masala Podi : அனைத்து வகை குழம்பு, கூட்டு, பொரியல் என அனைத்தும் இந்த ஒரு மசாலாப்பொடியே போதுமானது. வேற லெவல் சுவை தரும். ஆறு மாதங்கள் ஆனாலும் கெடாது.

Masala Podi : எல்லா வகை சைவ, அசைவ குழம்புகள்; வறுவல், பொரியல் என அனைத்துக்கும் இந்த மசாலாப்பொடி போதும்!
Masala Podi : எல்லா வகை சைவ, அசைவ குழம்புகள்; வறுவல், பொரியல் என அனைத்துக்கும் இந்த மசாலாப்பொடி போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

வர மிளகாய் – கால் கிலோ

(குண்டு மிளகாய், நீள மிளகாய் என் எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)

நாட்டு வரமல்லி – கால் கிலோ

மஞ்சள் – 100 கிராம்

கடலை பருப்பு – 100 கிராம்

துவரம் பருப்பு – 50 கிராம்

சீரகம் – 100 கிராம்

சோம்பு – 50 கிராம்

மிளகு – 100 கிராம் (50 கிராமும் சேர்க்கலாம்)

வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – 5 கொத்து (வெயிலில் சேர்த்து காய வைக்க வேண்டும்)

பச்சரிசி – 50 கிராம் (அலசி, தனியான வெயிலில் காயவைத்து எடுத்துக்கெர்ளள வேண்டும்)

பெருங்காயம் – ஒரு டேபிள் ஸ்பூன் (கட்டிப்பெருங்காயம் வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்)

உப்பு – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

இந்தப்பொருட்கள் அனைத்தையும் ஒரு அகலமான தட்டில் சேர்த்து நல்ல மொட்டை மாடி வெயிலில் காய வைக்க வேண்டும். 8 மணி நேரம் காயவைத்து எடுத்தால் அனைத்து பொருட்களும் மொறுமொறுப்பாக வரவேண்டும். கையில் எடுத்து உடைத்து பார்த்தாலே தெரியும் நல்ல மொறுமொறுப்பாக இருப்பது.

அதை மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை நாம் வறுக்க தேவையில்லை. நன்றாக வெயிலில் காய வைத்தாலே போதுமானது.

அரைத்து, ஆறவைத்து, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் சேர்த்து வைத்துக்கொண்டால் நீண்ட நாட்கள் வரும். எந்த காய்கறி வறுவல், பொரியல், அனைத்து வகை சாம்பார், குழம்பு, சைவ மற்றும் அசைவ குழம்பு என அனைத்துக்கும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். சுவை நன்றாக இருக்கும். மணமும் ஊரையேக்கூட்டும்.

இந்தப்பொடியைப் பயன்படுத்தி சாம்பார் வைப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

முருங்கை, மாங்காய், கேரட் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

புளி – எலுமிச்சை அளவு (ஊறவைத்து கரைத்தது)

மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்த பருப்பு – ஒரு கப்

வெங்காயம், தக்காளி – ஒரு கப் (நறுக்கியது)

கடுகு, உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு

புதிதாக அரைத்த பொடி – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்து தாளித்து பொரிந்தவுடன், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், முருங்கை, மாங்காய், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

அனைத்தும் வதங்கியவுடன், அதில் உப்பு, அரைத்த சாம்பார் மசாலாப்பொடி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் புளித்தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். பின்னர் வெந்த பருப்பை சேர்த்து கலந்துவிட்டால் சுவையான சாம்பார் தயார்.

சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

இதைப்பயன்படுத்தி மசாலா அரைத்து சேர்த்து, இந்தப்பொடியையும் கலந்து எந்த ஒரு அசைவ குழம்பையும் எளிதாக வைத்துவிடலாம்.

இந்தப்பொடியை சேர்த்து எந்த காய்கறியையும் வைத்து சாம்பார் வைக்கலாம். மற்ற குழம்பு வகைகளுக்கும், பொரியலுக்கும் கூட இந்தப்பொடியை பயன்படுத்தலாம்.

புளி சேர்க்காமல் இட்லி, தோசை, பொங்கல், உப்புமாவுக்கு தொட்டுக்கொள்ளும் சாம்பாருக்கும் இந்தப்பொடியை பயன்படுத்தலாம். நான் வெஜ் குழம்புகள், அனைத்து காய், மட்டன், சிக்கன் வறுவல் என அனைத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்