Liver : கல்லீரலை பாதுகாக்க வேண்டுமா.. இந்த பச்சடியை செய்து சாப்பிடுங்க.. ருசி அட்டகாசமாக இருக்கும் உடலுக்கும் நல்லது!
Gongura : கோங்குரா இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இதனால் கல்லீரல் பாதிப்புகளை தடுக்க உதவும். இதனால் அதன் கோங்குராவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல சத்துக்களும் உள்ளன. எனவே இந்த கோங்குரா எள் பச்சடி ஆரோக்கியத்திற்கு முற்றிலும் நன்மை பயக்கும்.
Gongura : கோங்குரா பச்சடியின் பெயரை சொன்னாலே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறுகிறது. கோங்குரா பேஸ்டுடன் சிறிது எள் சேர்த்து முயற்சித்து பாருங்கள். அதன் ருசி இரண்டு மடங்காக மாறும். உங்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த புளிப்பு உணவு சுவையாக இருககும். சூடான சாதத்தில் இரண்டு ஸ்பூன் கோங்குரா எள் விழுது மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், சுவை அட்டகாசமாக இருக்கும். பொதுவாக நாம் உணவில் கீரைகள், பருப்பு, காய் கறி, தயிர் இருந்தால் மட்டுமே முழுமையான உணவு. கோங்குரா கீரையை இப்படி செய்தால், ஒரு வாரம் சேமித்து வைக்க முடியும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் எள் சேர்ப்பது பெண்களுக்கு மிகவும் நல்லது. எள் அவர்களின் மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்கிறது. கோங்குரா இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இதனால் கல்லீரல் பாதிப்புகளை தடுக்க உதவும். இதனால் அதன் கோங்குராவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல சத்துக்களும் உள்ளன. எனவே இந்த கோங்குரா எள் பச்சடி ஆரோக்கியத்திற்கு முற்றிலும் நன்மை பயக்கும்.
கோங்குரா எள் பச்சடி செய்தேவையான பொருட்கள்
கோங்குரா - ஒரு கட்டு
எள் - கால் கப்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கருப்பு மிளகு - இரண்டு
சீரகம் - அரை ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
உளுந்து - ஒரு ஸ்பூன்
நிலக்கடலை - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
பூண்டு - ஐந்து பல்
பச்சை மிளகாய் - பத்து
கோங்குரா எள் பச்சடி செய்முறை
1. கோங்குரா பச்சடி தயாரிக்க , முதலில் கோங்குரா இலைகளை கழுவி தனியாக வைக்கவும்.
2. இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எள்ளு சேர்த்து நன்றாக வறுத்து தனியாக வைக்கவும்.
3. அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பச்சை மிளகாயை வதக்கவும். நன்றாக வதங்கிய பின் அதை எடுத்து ஒதுக்கி வைக்கவும்.
4. அதே கடாயில் மற்றொரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கோங்குரா சேர்த்து மெதுவாக வேகவிடவும்.
5. தண்ணீர் சேர்க்காமல் மிதமான தீயில் அடுப்பை வைத்து வேக விடவும்.
6. பிறகு பூண்டு சேர்த்து வதக்கவும்.
7. இப்போது மிக்ஸி ஜாரில் கோங்குரா இலைகள், எள், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
8. இந்த முழு கலவையையும் ஒரு பாத்திரத்தில் போடவும்.
9. இப்போது மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
10. உளுத்தம்பருப்பு, சீரகம், கடுகு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
11. கிண்ணத்தில் உள்ள கோங்குரா கலவையின் மீது தாளிப்பை ஊற்றவும். அவ்வளவுதான், சுவையான கோங்குரா எள் பச்சடி ரெடி.
இந்த கோங்குரா எள் பேஸ்ட்டை ஒரு முறை செய்தால் ஒரு வாரம் முதல் இரண்டு வாரங்கள் வரை கெட்டு போகாது. தண்ணீர் படாமல் வைத்து கொள்ள வேண்டும். எண்ணெயை இன்னும் கொஞ்சம் அதிகம் சேர்த்தால் அது நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாது. உணவுக்கு முன் இந்த பேஸ்ட்டை இரண்டு ஸ்பூன் சாதத்தோடு சப்பிடுவது மிகவும் நல்லது.
அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.
தொடர்புடையை செய்திகள்