குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்! பாலில் இதை சேர்த்து குடிக்கலாம்!
குளிர்காலம் என்றாலே மாறும் வெப்பநிலையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் மற்றும் காய்ச்சல் என பல நோய்கள் எளிமையாக வர வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எளிமையாக தவிர்ப்பதற்கு உடலின் எதிர்ப்பு சக்தி சரியான நிலையில் செயல்பட வேண்டும்.

குளிர்காலம் என்றாலே மாறும் வெப்பநிலையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் மற்றும் காய்ச்சல் என பல நோய்கள் எளிமையாக வர வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எளிமையாக தவிர்ப்பதற்கு உடலின் எதிர்ப்பு சக்தி சரியான நிலையில் செயல்பட வேண்டும். ஆனால் இதே குளிர்காலமே நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. எனவே இதற்கு எதிராக போராடும் வழியை சில உணவுகளே நமக்கு வழங்குகின்றன. ஆனால் இந்த உணவுகளை கண்டறிவதில் சில சிக்கல்கள் இருக்கலாம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை சீரான அளவில் எடுத்துக் கொண்டாலே ஆரோக்கியமான உடலை பேண முடியும்.
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சளி, காய்ச்சல் என பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. கால்சியம் மற்றும் புரதத்தின் முக்கிய ஆதாரமாக பால் உள்ளது. குளிர் காலநிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 5 பொருட்களை பாலில் கலந்து குடித்தால் அனைத்து பிரச்சினைகளையும் எளிமையாக கையாள முடியும்
வெல்லம்
குளிர்காலத்தில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த வழி. பாலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். மேலும், ஆற்றலைப் பராமரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் பாலில் வெல்லம் சேர்த்துக் குடிப்பது நல்லது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்வது பல்வேறு நலன்களை வழங்கும்.
