Adai Dosai: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் அடை தோசை.. எளிதாக செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Adai Dosai: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் அடை தோசை.. எளிதாக செய்வது எப்படி?

Adai Dosai: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் அடை தோசை.. எளிதாக செய்வது எப்படி?

Marimuthu M HT Tamil
Jun 06, 2024 10:28 AM IST

Adai Dosai: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் அடை தோசையை எப்படி தயார் செய்வது என்பது குறித்து அறிந்துகொள்வோம்.

Adai Dosai: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் அடை தோசை.. எளிதாக செய்வது எப்படி?
Adai Dosai: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் அடை தோசை.. எளிதாக செய்வது எப்படி?

அடை தோசை செய்யத் தேவையான பொருட்கள்

  • அரை கப் பச்சரிசி
  • அரை கப் சம புழுங்கல் அரிசி
  •  அரை கப் துவரம் பருப்பு
  • அரை கப்  கடலைப்பருப்பு 
  • 2 டீஸ்பூன் பாசிப் பருப்பு
  • அரை தேக்கரண்டி சோம்பு
  • 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 5 சிவப்பு மிளகாய்
  • தேவையான அளவு உப்பு
  • சில கறிவேப்பிலை
  • சில முருங்கைக்கீரை
  • சில கொத்தமல்லித்தழை
  •  தேவையான எண்ணெய்
  •  1 கப் நறுக்கிய வெங்காயம்
  • கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள்

அடை தோசை செய்யும் முறை: 

ஒரு பாத்திரத்தில் அரை கப் பச்சரிசி, அரை கப் துவரம் பருப்பு, அரை கப் கடலைப் பருப்பு, 2 டீஸ்பூன் பாசிப்பருப்பு, 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக நீரில் கழுவவும். 

அதன்பின்,  நாம் எடுத்து வைத்திருந்த சிவப்பு மிளகாய், சீரகம் போன்ற மசாலா பொருட்களையும் அதில் சேர்த்து நீர் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ளவும். நீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின், நீரை வடிகட்டிவிட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். அடுத்து சிறிதுநேரம் அப்படியே வைத்துவிட்டு, நன்கு கலக்கிக்கொண்டு, அதில், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, முருங்கைக் கீரை, 1 கப் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். 

பின், அடுப்பில் ஒரு தவாவை வைத்து சூடாக்கிவிட்டு, கலக்கி வைத்த அடை மாவை தோசையாக ஊற்றவும். பின், ஒரு பக்கம் வந்ததும் மெதுவாகப் புரட்டவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும். வெந்து முடிந்ததும் அடை தோசையை எடுத்து பரிமாறவும். 

இதை எந்த சைட் டிஸ்ஸுடனும் சேர்த்து சாப்பிடலாம். குறிப்பாக தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

கொத்தமல்லித்தழையில் இருக்கும் சத்துக்கள்:

தனியா என்று பரவலாக அழைக்கப்படும் கொத்தமல்லித்தழையில் பாஸ்பரஸ், கால்சீயம், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஏ,பி,சி மற்றும் கே என எண்ணற்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. பல விதமான உடல் நல நன்மைகளை கொண்டிப்பதால் இதன் இலை அடை தோசையில் பயன்படுத்தப்படுகிறது. 

கொத்தமல்லியில் அதிகப்படியான நார்ச்சத்துகளும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிரம்பியுள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

கொத்தமல்லித் தழையில் டெர்பினீன், க்வெர்செடின் மற்றும் டோகோபெரோல்ஸ் உள்பட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இவை செல்களின் பாதிப்பு ஏற்படாமல் போராடி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இவை வீக்கத்தை குறைத்து புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

முருங்கைக் கீரையில் இருக்கும் சத்துக்கள்:

முருங்கைக் கீரை மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு கீரை.இதில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக இரும்புச்சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ளன. முருங்கையின் கீரை மட்டுமல்லாமல் அதன் பூவையும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.

அதுமட்டுமல்ல எலும்புகளும், பற்களும் வலிமை பெற உதவும். கண் கோளாறுகள், பித்தம் தொடர்பான நோய்களில் இருந்து நிவாரணம் பெற்றுத் தரக்கூடியது முருங்கைக்கீரை. அதேபோல் முருங்கையின் ஈர்க்கும்கூட மருத்துவ குணம் நிறைந்தது.

வாரத்தில் ஒருநாள் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நலக்குறைபாடுகள் தீரும். முக்கியமாக வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.