தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Life Style What Are Reasons For Cause Pimples Over Face

Life Style : ஓ இதெல்லாந்தான் முகத்தில் பருக்கள் ஏற்பட காரணமா?

Priyadarshini R HT Tamil
Jan 28, 2023 01:44 PM IST

ஹார்மோன் மாற்றங்கள் முதல் சரும பராமரிப்புக்கு உபயோகிக்கும் பொருட்கள் மற்றும் உணவு, மன அழுத்தம் என உங்களுக்கு உள்ள அனைத்து பிரச்னைகளும் முகத்தில் பருக்கள் வருவதற்கு காரணமாக இருக்கும். முகப்பருக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

  1. அழுக்கான கைகளுடன் உங்கள் முகத்தை தொடுவதால் முகப்பருக்கள் தோன்றுகின்றன. அழுக்கு கைகளில் உள்ள கிருமிகள் உங்கள் அங்கிருந்து முகத்திற்கு செல்லலாம். நாள் முழுவதும் நாம் பல்வேறு இடங்களை தொடுகிறோம். அவற்றில் கண்ணுக்குத் தெரியாத லட்சக்கணக்கான கிருமிகள் இருக்கின்றன. முகத்தில் கை வைப்பதற்கு முன் கையை நன்றாக கழுவி சுத்தம் செய்யவேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார். இல்லாவிட்டால் கிருமிகள் முகப்பருக்கள் அல்லது மற்ற சரும வியாதிகளை ஏற்படுத்தும். நீங்கள் தினமும் செய்யும் ஸ்கின் கேர் வழக்கத்தை துவங்கும் முன் உங்கள் கைகளை நன்றாக கழுவவேண்டும். 
  2. அழுக்கான தலையணை, தலையணையுறை பயன்படுத்துவதாலும் முகப்பருக்கள் ஏற்படுகின்றன. உங்கள் தலையணை மற்றும் அதன் உறையில் எண்ணெய் உள்ளிட்ட கடினமான அழுக்குகள் படிய வாய்ப்புள்ளது. ஒவ்வொரு நாள் இரவிலும் நீங்கள் அந்த தலையணையை வைத்து உறங்குகிறீர்கள். அப்போது அந்த கிருமிகள் உங்கள் சருமத்தில் படுகிறது. எனவே அடிக்கடி உங்கள் மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள் ஆகியவற்றை அடிக்கடி துவைத்து பயன்படுத்த வேண்டும் நிபுணர்கள் கூறுகிறார்கள். 
  3. அதிகமான சர்க்கரை பண்டங்களை உட்கொள்வதாலும் முகப்பருக்கள் ஏற்படுகின்றன. அது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவுகள் பெண்களுக்கு அவை ஆண்ரோஜெனுக்கு உணர்திறன் அதிகப்படுத்தி சருமத்தில் எண்ணெய் சுரப்பை அதிகரித்து, அதில் சிறுசிறு ஓட்டைகளை ஏற்படுத்தும். அது பரு அல்லது கட்டியை உருவாக்கும். அதில் பருக்களை உருவாக்கும் பாக்டீரியாக்களை வளரவிடும். பின்னர் அது வெடித்துவிடும். 
  4. ஒருவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தால், அவருக்கு ஆண்ட்ரோஜென்கள் அல்லது ஆண்ரோஜென்கள் உணர்திறன் அதிகரிக்கும். இது எண்ணெய் சுரப்பிகளில் அதிக எண்ணெயை சுரக்கச் செய்யும். அது சருமத்தில் முகப்பருக்கள் ஏற்பட காரணமாகும். 
  5. சில மருந்துகளும் முகப்பருக்களை ஏற்படுத்தும். வாய்வழியாக ஸ்டீராய் மருந்துகள் உட்கொள்வது, புரதத்திற்கான மாத்திரைகள் எடுத்துக்கொள்வதும் முகப்பருக்கள் ஏற்பட காரணமாகிறது. 

WhatsApp channel

டாபிக்ஸ்