எலுமிச்சையில் இருந்து சாறு எடுத்தபின்னர் அதன் தோல்களை வீசி எரிந்து விடுகிறோம். அவற்றால் எந்த பயனும் இல்லை என அவ்வாறு செய்வதுண்டு. ஆனால் எலுமிச்சை தோலில் இருக்கும் நற்பலன்களை தெரிந்து கொண்டால் இனிமேல் அதை தூக்கி வீச மாட்டீர்கள்
Pexels
எலுமிச்சை சாறு பல்வேறு வகைகளில் பயன் அளிப்பதாக உள்ளது. உணவு, சரும பாதுகாப்பு, வலி நிவாரணம், பொருள்களை சுத்தப்படுத்துதல் என எலுமிச்சை சாறு பயன்படுகிறது. இதைபோல் எலுமிச்சை தோலிலும் ஒளிந்திருக்கும் பல விதமான நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
Pexels
வீட்டை சுத்தப்படுத்த முக்கிய பங்காற்றுகிறது எலுமிச்சை தோல்கள். வீட்டில் வீசும் துர்நாற்றத்தை போக்குவதற்கு எலுமிச்சை தோல்களை பயன்படுத்தலாம்
Pexels
இயற்கை ப்ளீச் ஆக எலுமிச்சை தோல்கள் இருக்கிறது. பாத்திரங்கள், கப்களில் இருக்கும் நீங்காத கரைகளையும், துர்நாற்றத்தையும் போக்க உதவுகிறது. எலுமிச்சை தோல்களை கரை படிந்த இடத்தில் நன்கு தேய்த்தாலே பலனை கண்கூடாக பார்க்கலாம். அத்துடன் அந்த இடமும் பளபளப்பாகும்
Pexels
குக்கரில் சில காய்கறிகளை வேகவைக்கும் போது கருப்பு நிறம் படிகிறது. இதை தவிர்க்க வேக வைக்கும் காய்கறியுடன் கொஞ்சம் எலுமிச்சை தோல்களையும் சேர்த்தால் கருப்பு படிவது தடுக்கப்படுகிறது
Pexels
எலுமிச்சையில் இருந்து சாறு எடுத்தவுடன், அதன் தோல்களை பிரிட்ஜில் வைக்க வேண்டும். இதன்மூலம் ப்ரிட்ஜில் இருந்து வெளிபடும் துர்நாற்றம் தடுக்கப்படுகிறது
Pexels
ஸ்டீல் பாத்திரங்கள் பளபளவென மின்ன வேண்டும் என்று நினைத்தால், முதலில் அதை எலுமிச்சை தோல்களை வைத்து நன்கு தேய்த்து பின்னர் காய்ந்த துணியை வைத்து துடைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பாத்திரங்கள் பளபளப்பாகும்
Pexels
வீட்டில் தொட்டிகளில்செடிகளை வளர்ப்பவர்கள், அதில் எலுமிச்சை தோல்களை போட்டு வைத்தால் மண்ணுக்கும், செடிக்கும் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் கிடைக்கும்
வீட்டிலேயே ஸ்பா ட்ரீட்மெண்ட் எடுக்க விரும்புகிறவர்கள், எலுமிச்சை தோல்களை குளிக்கும் நீரில் போட்டு குளிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் வியர்வை துர்நாற்றம் நீங்கிவடும்
Pexels
கொத்தமல்லி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இதோ!