Weight Loss : மளமளவென எடை குறைக்க எலுமிச்சை தண்ணீரா? என்ன செய்யலாம், கூடாது பாருங்கள்!
Weight Loss : மளமளவென எடை குறைக்க எலுமிச்சை தண்ணீர் பருகுகிறீர்களா? அப்போது என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்று பாருங்கள்.
Weight Loss : உடல் எடையை குறைப்பதற்கு எலுமிச்சை தண்ணீரை பயன்படுத்துகிறீர்களா? என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்று பாருங்கள்.
எலுமிச்சை தண்ணீரின் நன்மைகள்
எலுமிச்சை தண்ணீர் நீங்கள் எளிதாக செய்யக்கூடிய பானம் ஆகும். தண்ணீரில் எலுமிச்சையை சேர்த்து செய்வதாகும். இதை நீங்கள் சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம். இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. செரிமானத்தை தூண்டுகிறது.
கலோரிகள் குறைவான பானம்
எலுமிச்சை தண்ணீர் கலோரிகள் குறைவான பானம். ஒரு டம்ளர் தண்ணீரில் அரை எலுமிச்சை சாறை பிழிந்துவிடவேண்டும். இது உங்களுக்கு 6 கலோரிகள் தருகிறது. இதில் சர்க்கரை சேர்க்கக்கூடாது. கலோரிகள் குறைக்க விரும்பினால், இனிப்பு சேர்க்கக்கூடாது.
சர்க்கரை அல்லது உப்பு சேர்க்காதீர்கள்
இந்த பானத்தின் சுவையை அதிகரிக்க விரும்பினால், இதில் சர்க்கரை அல்லது உப்பு சேர்க்கக்கூடாது. சேர்த்தால் அந்த தண்ணீரின் நன்மையை தராது. மேலும் உடலின் கலோரி அளவை அதிகரித்து, உடலுக்கு ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுகிறது.
சுவையை அதிகரிக்க என்ன செய்வது
சர்க்கரை அல்லது உப்பு சேர்க்காமல் பருகுவது உங்களுக்கு சுவை தரவில்லையென்றால், இந்த தண்ணீரில், எலுமிச்சை பழத்துண்டுகள், தேன், இஞ்சி, புதினா ஆகியவற்றை சேர்த்து ஊறவைத்து பருகுங்கள். இது சுவையை நன்றாக்கும். மேலும் உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கும்.
நாள் முழுவதும் கூடாது
எலுமிச்சை தண்ணீரை நாள் முழுவதும் பருகக்கூடாது. அது தேவை இல்லாதது. இதை பழக்கமாக்குங்கள். இதை காலை அல்லது மாலை, வழக்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
வடிகட்டிய தண்ணீரை பயன்படுத்துங்கள்
எலுமிச்சை பழச்சாறை தண்ணீரில் கரைத்து பருகவேண்டும். தண்ணீரும் வடிகட்டியதை பயன்படுத்தவேண்டும். வடிகட்டாத தண்ணீரில் மாசுகள் நிறைந்ததாக இருக்கும். இதனால் உங்களுக்கு தொற்றுகள் ஏற்படும்.
எலுமிச்சை சாறை நேரடியாக பருகாதீர்கள்
எலுமிச்சை சாறை எப்போதும் தண்ணீரில் கலந்து பருகுங்கள். எலுமிச்சை சாறை நேரடியாக பருகினால், அது பற்களில் உள்ள எனாமலை பாதிக்கும். நாள்பட்ட குடல் உபாதைகள் உள்ளவர்களுக்கு சுகாதார நிபுணர்கள், எலுமிச்சை சாறை பருகும்போது கவனம் தேவை என்று அறிவுறுத்தியுள்ளனர்.
காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது
எலுமிச்சை சாறை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. இது உங்கள் உடலின் வளர்சிதையை ஊக்குவித்து, உங்கள் நாளுக்கு நல்ல துவக்கத்தை அளிக்கும். செரிமானத்துக்கு வழிவகுக்கும். உங்கள் உடலுக்கு இரவு உறக்கத்துக்குப் பின்னர் தேவையான நீர்ச்சத்தை வழங்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்