பெண்களே, மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியால் அவதியா? இந்த ஒரு உருண்டை மட்டும் போதும்!
பெண்களுக்கு ஊட்டச்சத்தை வழங்கும் உருண்டை எது என்று பாருங்கள். மாதவிடாய் கால ஆரோக்கியத்துக்கு நல்லது.
12 வயது முதல் பெண்கள் பூப்படையத் துவங்குகிறார்கள். இவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் கருப்பையில் தோன்றும் கருமுட்டை, உடைந்து வெளியேறுகிறது. அது பெண்ணின் பிறப்புறப்பு வழியாக உதிரமாக வெருகிறது. மாதவிடாய் என்பது பூப்பெய்திய அனைத்து பெண்களுக்கும் வழக்கமாக வரும் ஒன்று. இது ஹார்மோன்களின் மாற்றத்தால் ஏற்படுகிறது. கர்ப்பத்துக்கு பெண்களின் உடலை தயார்படுத்துவதில் மாதவிடாய் என்பது முக்கியமானது.
இது எப்படி ஏற்படுகிறது
பெண்கள் கர்ப்பம் தரிக்கவில்லையென்றால், கருமுட்டை உரைந்து மாதவிடாய் உதிரமாக வெளியேறுகிறது. இதுபோல் வெளியேறும்போது, அதில் ரத்தம் மற்றும் கருப்பை திசுக்கள் கலந்திருக்கும்.
எத்தனை நாட்கள் இருக்கும்?
மாதவிடாய் என்பது பொதுவாக பெண்களுக்கு 2 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். இதில் 1 முதல் 5 ஸ்பூன வரையிலான ரத்தத்தை பெண்கள் ஒரு நாளில் இழக்கிறார்கள்.
எத்தனை நாட்களில் வரும்
மாதவிடாய் என்பது 21 முதல் 35 நாட்களில் வரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மாறுபடும். 12 வயது முதல் ஏற்படும் மாதவிடாய் 10 முதல் 15 வயதுக்குள் பெண்களுக்கு ஏற்படுகிறது. 40 வயதுகளின் மத்தியில் இருந்து 50 வயதுகளின் மத்தியில் வரை அது நின்றுவிடுகிறது. அது நிற்பதற்கு முன்னர் படிப்படியாக குறைகிறது.
மாதவிடாயின்போது பெண்களுக்கு வலி எப்படி ஏற்படும்?
பின்புறம் அல்லது அடிவயிற்றில் வலி
தலைவலி
மன மாற்றம்
கோவம்
முகப்பரு மற்றும் சருமத்தில் மாற்றம்
ஆகியவை ஏற்படுகிறது.
இந்தப்பிரச்னைகள் ஏற்பட்டால், பெண்கள் சில உணவுகளை சாப்பிட்டால் அது அவர்களுக்கு மாதவிடாய் கால சோர்வு மற்றும் மனநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உதவும். அது என்ன என்று பாருங்கள். மாதவிடாய் கால சோர்வைப் போக்க உதவும் உருண்டையை இப்படி செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்
பேரீட்சை பழம் – 50 கிராம்
பாதாம் – 10 கிராம்
வேர்க்கடலை – ஒரு கைப்பிடி
எள் – 2 டேபிள் ஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
செய்முறை
பேரீட்சை பழத்தின் விதைகளை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் நெய் சேர்த்து பாதாம் மற்று வேர்க்கடலை இரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். மிக்ஸி ஜாரில் நாட்டுச்சர்க்கரையைச் சேர்த்து முதலில பொடித்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து வறுத்த பருப்புக்களை போட்டு பொடித்துக்கொள்ளவேண்டும். இதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, பேரிட்சை பழம் மற்றும் நெய் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.
இதை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவேண்டும். இதை தினமும் ஒரு உருண்டையாக எடுத்து தினமும் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் சாப்பிடவேண்டும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்களுக்கு இந்த உருண்டை புத்துணர்வையும், ஆற்றலையும் தரும்.
இதை குறைவான அளவு மட்டும் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்கவேண்டும். அதற்கு மேல் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதால் அவ்வப்போது புதிதாக செய்துகொள்வது நல்லது. இதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெளியேயும் வைத்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்