கல்லீரலை தானமாக கொடுத்தார்.. கடைசியாக கேட்ட அவளது குரல் - புஷ்பா 2 பார்க்க சென்று பலியான பெண் கணவர் கண்ணீர்
எனக்கு கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக கொடுத்த அவர் தற்போது என்னுடன் இல்லை என்று புஷ்பா 2 பார்க்க சென்று பலியான பெண் கணவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சி பார்க்க சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். அவரது மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வகுகிறார். டிசம்பர் 5ஆம் தேதி வெளியான படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது.
இதையடுத்து இந்த காட்சியை காண அல்லு அர்ஜுன் வருவதாக தகவல் வெளியான நிலையில், அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சந்தியா என்ற பெண் பிரதமாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக, அல்லு அர்ஜுன் பார்ப்பதற்காக கூடிய ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தின் ரேவதி தனது கணவர் பாஸ்கர், மகன் ஸ்ரீதேஜ், மகள் சான்வி ஆகியோருடன் இருந்தார்.
