Kovakkai Thuvayal : கோவக்காயை சாப்பிட குழந்தைகள் அடம்பிடிக்கிறார்களா? இதோ துவையலாக செய்துவிடுங்கள்!-kovakkai thuvayal are children eager to eat kovakkai heres a quick wash - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kovakkai Thuvayal : கோவக்காயை சாப்பிட குழந்தைகள் அடம்பிடிக்கிறார்களா? இதோ துவையலாக செய்துவிடுங்கள்!

Kovakkai Thuvayal : கோவக்காயை சாப்பிட குழந்தைகள் அடம்பிடிக்கிறார்களா? இதோ துவையலாக செய்துவிடுங்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 27, 2024 04:48 PM IST

Kovakkai Thuvayal : கோவக்காயை சாப்பிட குழந்தைகள் அடம்பிடிக்கிறார்களா? இதோ துவையலாக செய்து சாப்பிட சுவை அள்ளும்.

Kovakkai Thuvayal : கோவக்காயை சாப்பிட குழந்தைகள் அடம்பிடிக்கிறார்களா? இதோ துவையலாக செய்துவிடுங்கள்!
Kovakkai Thuvayal : கோவக்காயை சாப்பிட குழந்தைகள் அடம்பிடிக்கிறார்களா? இதோ துவையலாக செய்துவிடுங்கள்!

தேவையான பொருட்கள்

கோவக்காய் – 100 கிராம்

புளி – சிறிய துண்டு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 4 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

கடலை பருப்பு – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பச்சை மிளகாய் அல்லது வர மிளகாய் – 2 (உங்கள் கார அளவுக்கும் மிளகாயின் கார அளவுக்கும் ஏற்ப அளவை மாற்றிக்கொள்ளலாம்)

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வர மிளகாய் – 1 (முழுதாக தாளிக்கவேண்டும்)

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, வெந்தயம், உளுந்து, கடலை பருப்பு, சீரகம் சேர்த்து நன்றாக பொரியவிடவேண்டும். அனைத்தும் சிவந்து வந்தவுடன், அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கோவக்காய், புளி ஆகிய அனைத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.

நன்றாக வதக்கியவுடன், எடுத்து ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை மற்றும் முழு வரமிளகாயை சேர்த்து அரைத்து வைத்துள்ள துவையலில் சேர்க்கவேண்டும்.

இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அல்லது இட்லி தோசை போன்ற டிஃபனுடனும் சேர்த்துக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

பொதுவாக குழந்தைகள் கோவக்காயை விரும்பி சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதுபோல துவையல் அரைத்து கொடுக்கும்போது அவர்களுக்கு அது என்ன காய் என்பதே தெரியாமல் அவர்கள் வழக்கமான துவையல் என்று நினைத்து சாப்பிட்டுவிடுவார்கள். குழந்தைகளை கோவக்காய் சாப்பிட வைக்கும் வழிகளுள் ஒன்று.

கோவக்காயின் நன்மைகள்

நீங்கள் உடல் பருமனால் அவதிப்படுபவர் என்றால், உங்கள் உணவில் கட்டாயம் கோவக்காய் இருக்கட்டும். அது உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கோவக்காயில் 1.4 கிராம் இரும்புச்சத்து உள்ளது, இது உடலில் இருந்து ரத்த சோகையை நீக்குகிறது. உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், அதிலிருந்து விடுபட இந்தக்காய் உதவும்.

நீங்கள் மாதவிடாய் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், கோவக்காய் உங்களை காப்பாற்றும். தினமும் எடுத்துக்கொண்டால், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியில் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளலாம்.

கோவக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் புற்றுநோய், கட்டிகள் மற்றும் சிறுநீரக கற்கள் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

தினமும் கோவக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் அதிகப்படியான சர்க்கரையின் அளவு குறையும். ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

கோவக்காய் நார்ச்சத்துகள் நிறைந்தது. இது உங்கள் உடலின் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற நோய்களில் இருந்து உங்களை காக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.