தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kidney Cleansing : உங்கள் சிறுநீரகத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? அதற்கான எட்டு வழிகளை பாருங்கள்!

Kidney Cleansing : உங்கள் சிறுநீரகத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? அதற்கான எட்டு வழிகளை பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 13, 2024 05:02 PM IST

Kidney Cleansing : உங்கள் சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் விஷயங்களை தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.

Kidney Cleansing : உங்கள் சிறுநீரகத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? அதற்கான எட்டு வழிகளை பாருங்கள்!
Kidney Cleansing : உங்கள் சிறுநீரகத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? அதற்கான எட்டு வழிகளை பாருங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

உணவு, வாழ்க்கை முறை பழக்கங்கள், உங்கள் சிறுநீரகத்தை சுத்தம் செய்து சிறுநீரக இயக்கத்தை சீராக்கி, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் முறைப்படுத்தும். உங்கள் சிறுநீரகத்தை இயற்கை முறையில் சுத்தம் செய்யும் 8 வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

தண்ணீர்

உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் நல்லது. நீங்கள் போதிய அளவு தண்ணீர் பருகினால்தான், சிறுநீரகம் உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவும். அது சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது. நல்ல முறையில் வடிகட்டுவதற்கும் உதவுகிறது.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர், கடுமையான கழிவுநீக்கியாகும். எலுமிச்சையில் உள்ள உட்பொருட்கள், சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாத்து, சிறுநீர் வெளியேற உதவுகிறது. மாசுக்களையும் நீக்குகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சிறுநீரக கற்கள் உருவாவதில் இருந்து தடுக்கிறது.

கிரான்பெரிகள்

கிரான்பெரிகள், இதில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ப்ரான்தோசியானிடின்ஸ்கள் உள்ளது. இது சிறுநீரக தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புக்களை குறைக்கிறது. சிறுநீரகத்தில் பாக்டீரியா தொற்றுக்கள் வளர்ச்சியை குறைத்து, சிறுநீரகத்தை காத்து, யூரினரி ட்ராக் தொற்றுக்களை போக்குகிறது.

கீரைகள்

கீரைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. ஸ்விஸ் சார்ட், காலே போன்ற கீரைகள், சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக, இதில் மெக்னீசியம், நிறைந்துள்ளது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

இஞ்சி

இஞ்சியில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளன. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைகள், இஞ்சியை சிறுநீரக ஆரோக்கியத்துக்கு உதவும் ஒன்றாக மாற்றியுள்ளது. இது உடலின் ஆக்ஸிடேடிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதனால் சிறுநீரக ஆரேக்கியம் மேம்படுகிறது.

ஆப்பிள்

ஆப்பிளில் பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதன் இயற்கையான கரையக்கூடிய தன்மை, சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற உட்பொருள், வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்துள்ளது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சிறுநீரக பிரச்னைகளை குறைக்க உதவுகிறது. இது சிறுநீரகத்தை தொற்றுகளில் இருந்து காக்கிறது.

காட்டு முள்ளங்கி வேர் தேநீர்

டேன்டேலியன் எனப்படும் காட்டு முள்ளங்கியின் வேரில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர், இயற்கையில் கழிவு நீக்கம் செய்து சிறுநீரகம் நன்றாக இயங்குவதற்கு உதவுகிறது. அதிக சிறுநீரை உருவாக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. வயிறு உப்புசத்தையும் குறைக்கிறது. உடலில் தண்ணீரை தக்கவைக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்