உடலில் இருக்கும் கொல்ஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 12, 2024

Hindustan Times
Tamil

நிறைவுற்ற கொழுப்புகளுக்கு பதில் ஆரோக்கிய கொழுப்புகளை சாப்பிடுங்கள். நிறைவுற்ற கொழுப்புகள் கொல்ஸ்டராலாக மாறக்கூடும் எனவே அவகோடா, ஆலிவ், ஆலிவிதை, சூரியகாந்தி விதை எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்தலாம்

சிவப்பு நிற இறைச்சிகளுக்கு பதிலாக மீன், தாவரம் சார்ந்த புரதங்களை எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவே காணப்படும். அத்துடன் இதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் ரத்தத்தில் கொல்ஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கும்

நார்ச்சத்து மிக்க உணவுகள் கொல்ஸ்ட்ரால் உறிஞ்சுவதை கட்டுப்படுத்தும். ஓட் மீல், முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்களில் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்றவற்றை டயட்டில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்

அதிக அளவில் காய்கறிகளை சாப்பிட வேண்டும். ப்ரோக்கோலி, முட்டைகோஸ், கீரை வகைகள் போன்றவற்றில் கொல்ஸ்ட்ராலை குறைக்கும் தன்மை உள்ளது

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட் மீன் வகைகளான சாலமன், சூரை, கெளுத்தி ஆகியவை உடலில் இருக்கும் நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கிறது. இதயத்தில் அழற்சி ஏற்படுவது, ரத்தம் உறைதலை கட்டுப்படுத்தி மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது

அதிக நார்ச்சத்துக்களை கொண்டிருக்கும் முழு தானியங்கள் உடலில் கொல்ஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதை தடுக்கிறது 

சோயா சார்ந்த உணவுகள் கொல்ஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கான சிறந்த சாய்ஸாக இருக்கிறது

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கும் க்ரீன் டீ கொல்ஸ்ட்ரால் அளவை வெகுவாக குறைக்க உதவுகிறது

ரத்த அழுத்தம், கொல்ஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் உணவாக பூண்டு உள்ளது

 ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!