தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kerala Style Palakottai Gravy : கேரளா ஸ்டைல் பலாக்கொட்டை குழம்பு! வாயில் எச்சில் ஊறும் சுவையில் செய்வது எப்படி?

Kerala Style Palakottai Gravy : கேரளா ஸ்டைல் பலாக்கொட்டை குழம்பு! வாயில் எச்சில் ஊறும் சுவையில் செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Jun 15, 2024 10:51 AM IST

Kerala Style Palakottai Gravy : கேரளா ஸ்டைல் பலாக்கொட்டை குழம்பை வாயில் எச்சில் ஊறும் சுவையில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Kerala Style Palakottai Gravy : கேரளா ஸ்டைல் பலாக்கொட்டை குழம்பு! வாயில் எச்சில் ஊறும் சுவையில் செய்வது எப்படி?
Kerala Style Palakottai Gravy : கேரளா ஸ்டைல் பலாக்கொட்டை குழம்பு! வாயில் எச்சில் ஊறும் சுவையில் செய்வது எப்படி? (ann's little corner)

தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

ட்ரெண்டிங் செய்திகள்

பச்சை மிளகாய் – 2 (கீறியது)

இஞ்சி – ஒரு இன்ச் (துருவியது)

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு

பூண்டு – ஒரு கைப்பிடியளவு

உப்பு – தேவையான அளவு

தக்காளி – 1

தேங்காய் மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் – அரை கப்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

புளி – சிறிது

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

(மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கடாயில் சேர்த்து சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல மையாக அரைத்துக்கொள்ளவேண்டும்)

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

சின்ன வெங்காயம், பூண்டு, உப்பு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பின்னர் பலாக்கொட்டை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவேண்டும்.

பின்னர் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, கடுகு, சீரகம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மசாலாவில் சேர்க்கவேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, சிறுது நேரம் மூடிவைக்கவேண்டும்.

பின்னர் சூப்பர் சுவையில் பலாக்கொட்டை குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடவேண்டும்.

பலாக்கொட்டையில் உள்ள சத்துக்கள்

100 கிராம் பலாக்கொட்டையில், தண்ணீர் சத்துக்கள் 64.5 கிராம், கார்போஹைட்ரேட் 38.4 கிராம், புரதம் 7.04 கிராம், நார்ச்சத்து 1.5 கிராம், கொழுப்பு 0.43 கிராம், இரும்பு 1.5 மில்லி கிராம், பொட்டாசியம் 216 மில்லி கிராம், பாஸ்பரஸ் 97 மில்லி கிராம், சோடியம் 63.2 மில்லி கிராம், மெக்னீசியம் 54 மில்லி கிராம், கால்சியம் 50 மில்லி கிராம், வைட்டமின் சி 11 மில்லி கிராம், ரிபோஃப்ளாவின் 0.3 மில்லி கிராம், தியாமின் 0.25 மில்லி கிராம், வைட்டமின் ஏ 17 மில்லி கிராம் உள்ளது.

பலாக்கொட்டையின் நன்மைகள்

வாயுத்தொல்லைகளை போக்க உதவுகிறது. இதற்கு கல்லீரல் மற்றும் பித்தப்பை உதவுகிறது.

பலாக்கொட்டைகளின் சாறு தண்ணீராகவும், ரத்தம் மற்றும் சளியுடன் கழியும் மலத்தை சரிசெய்ய உதவுகிறது. வயிற்றுக்குள் உள்ள தொற்றுக்களை போக்குகிறது.

வறுத்த பலாக்கொட்டைகள், பாலுணர்வை உண்டாக்கும்.

ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.

வலி மற்றும் எலும்பு பலவீனத்தைப் போக்கும்.

நுண்ணுயிர்களால் ஏற்படும் தொற்றுக்களை போக்குகிறது.

எலும்புகளை வலுப்படுத்துகிறது.

உடலுக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது.

பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.

புதிப்பிக்கத்தக்க ஆற்றல் மையமாக பலாக்கொட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.

பலாக்கொட்டை பொடியில் உள்ள லெக்டின், ஹெச்.ஜ.வி தொற்று பாதித்தவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கிறது.

உடலுக்கு ப்ரிபயோடிக்காக பயன்படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்துக்களும், உடலுக்கு குளுமையையும் வழங்கக்கூடியது பலாக்கொட்டை.

டாபிக்ஸ்