Karuppu Ulundhu Kali Recipe : புதிதாக பூப்பெய்த பெண்களுக்கான திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்தங்களி.. செய்வது எப்படி பாருங்க!
Karuppu Ulundhu Kali Recipe : கருப்பு உளுந்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நன்மை பயக்கும். ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உளுந்து சேர்த்த உணவுகளை பயன்படுத்துவது நல்லது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சிறுநீரகங்களை பாதுகாக்க உளுந்து உதவுகிறது.
Karuppu Ulundhu Kali Recipe : கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது. இந்த கருப்பு உளுந்தை பூப்பெய்த பெண்களுக்கு கொடுப்பது மிகவும் நல்லது. திருநெல்வேலி ஸ்டெயிலில் உளுந்தங்களி செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்
கருப்பு உளுந்து களி செய்ய தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து 100 கிராம்
பச்சரிசி - கால்கிலோ
நல்லெண்ணெய் - 200 மில்லி லிட்டர்
கருப்பட்டி - 1/2 கிலோ
ஏலக்காய் - 4
சுக்கு - ஒரு சிறிய துண்டு
உளுந்தங்களி செய்முறை
உளுந்தங்களி செய்ய முதலில் கருப்பு உளுந்தை அடிப்பாகம் கனமானதாக உள்ள பாத்திரத்தில் சேர்ந்து நன்றாக வறுக்க வேண்டும். உளுந்து வாசனை வர ஆரம்பித்த உடன் உளுந்தை ஒரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.
இதே போல் அரிசியையையும் தனியாக வறுக்க வேண்டும். அரிசி வறுக்கும் போதே சுக்கையும் தட்டி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 5 ஏலக்காயையும் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த பொருட்களை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இந்த பவுடரை ஒரு காற்று புகாத பாட்டிலில் போட்டு வைத்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அரைக்கிலோ கருப்பட்டியை தட்டி சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும். பாகு பதம் பார்க்க தேவை இல்லை. கருப்பட்டி கரைந்தவுடன் வடிகட்டியால் வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வடி கட்டி எடுத்த கருப்பட்டி பாகை பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதில் ஒரு கப் உளுந்து அரிசி கலந்த மாவை சேர்த்து நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து மாவை நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். மாவு நன்றாக வெந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக நல்லெண்ணெய்யை ஊற்றி கலந்து விட வேண்டும். அடுப்பில் உளுந்து களி ஒட்டாமல் வரும் வரை நன்றாக கலந்து விட வேண்டும். களி நன்றாக வெந்த பிறகு தேவை என்றால் நல்லெண்ணெய் விட்டு பரிமாறலாம். அவ்வளவுதான் ருசியான சத்தான உளுந்தங்களி ரெடி..
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் தினமும் உளுந்தை சேர்த்துக்கொள்ளலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உளுந்து உங்கள் உடலில் குளுக்கோஸ் அளவை சரியாக பராமரிக்கவும், உங்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. குறைவான அளவில் இனிப்பு சேர்த்து பயன்படுத்துவது நல்லது.
கருப்பு உளுந்தின் நன்மைகள்
கருப்பு உளுந்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நன்மை பயக்கும். ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உளுந்து சேர்த்த உணவுகளை பயன்படுத்துவது நல்லது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இரும்புச்சத்தை அதிகரிக்கிறது.
உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துகொள்ள உதவுகிறது. கருப்பு உளுந்து தலைமுடிக்கு பளபளப்பை கொடுக்க உதவுகிறது.
கருப்பு உளுந்து உடல் எடையை குறைக்கிறது. எலும்பை உறுதியாக்குகிறது. சிறுநீரகங்களை பாதுகாக்க கருப்பு உளுந்து உதவுகிறது. ஆண் இனப்பெருக்க உறுப்பு அரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.
அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்