தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadamba Poriyal: கல்யாண வீட்டு கதம்ப பொரியல்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Kadamba Poriyal: கல்யாண வீட்டு கதம்ப பொரியல்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Nov 16, 2023 01:09 PM IST

கல்யாண வீட்டில் செய்வது போல் கதம்ப பொரியல் செய்வது எப்படி என பார்க்கலாம்.

கதம்ப பெரியல்
கதம்ப பெரியல்

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

கேரட்

பீன்ஸ்

கோஸ்

பச்சை பட்டாணி

வெங்காயம்

பூண்டு

இஞ்சி

பச்சை மிளகாய்

காய்ந்த மிளகாய்

பெருங்காயம்

சீரகம்

கடுகு

உளுந்தம்பருப்பு

கடலைப்பருப்பு

உப்பு

எண்ணெய்

தேங்காய் துருவல்

கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு வாணலியில் அரை குழி கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும். அதில் அரை ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பை சேர்த்து பொரிய விட வேண்டும். கடுகு பொரிந்த பின் ஒரு சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும். இதில் ஒரு கப் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.  அதில் கால் ஸ்பூன் பெருங்காயங்கத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் இரண்டு பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். இதில் இரண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். அதில் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்க வேண்டும்.

இதில் ஒரு கப் முட்டை கோஸ், ஒரு கப் பட்டை பட்டாணி, ஒரு கப் கேரட் , ஒரு கப் பீன்ஸை சேர்த்து வதக்க வேண்டும். இதை நன்றாக வதக்கி அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விட வேண்டும். காய் கறி வெந்த பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

காய்கறி நன்றாக வெந்த பிறகு அதில் ஒரு கப் தேங்காயை சேர்த்து வதக்க வேண்டும். கடைசியாக அதில் ஒரு அரை கைபிடி கொத்தமல்லியை சேர்த்து வைக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்