அதிகாலையில் இந்த பானங்கள் மட்டும் போதும்! மழைக்கால நோய்த்தொற்றுகளை விரட்டி எதிர்ப்பாற்றலைத் தரும்!
மழைக்காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை விரட்டி, உங்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலைத்தரும் இந்த பானங்களைப் பருகி பலன்பெறுங்கள்.

அதிகாலையில் இந்த பானங்களை மட்டும் பருகுங்கள். உங்களை மழைக்கால தொற்றுகளில் இருந்து காத்து, உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். இங்கு 10 பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒன்றாக எடுத்துக்கொள்ளவேண்டும். இதனால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் பெருகும். குளிர் காலத் துவங்கிவிட்ட வேளையில், உங்கள் நோய் எதிர்ப்பாற்றலை நீங்கள் வலுவாக வைத்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் அது இல்லாவிட்டால் உங்கள் உடலில் எளிதாக நோய்கள் தொற்றிக்கொள்ளும். எனவே நீங்கள் வைட்டமின் சி சத்து அதிகம் கிடைக்கும் பானங்களை பருகவேண்டும். அவை பழச்சாறுகள், ஸ்மூத்திகள், டீடாக்ஸ் பானங்கள், தேநீர் என இருக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானங்கள் ஒவ்வொன்றிலும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் குவிந்துள்ளன. எனவே இவற்றைப் பருகி பலன்பெறுங்கள்.
ஆப்பிள் சைடர் வினிகர்
இந்த பானத்தை தயாரிக்க பட்டைப்பொடி, ஜாதிக்காய்ப்பொடி மற்றும் துருவிய ஆப்பிள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு வடிகட்டி, அதில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மிதமான சூட்டில் பருகவேண்டும். ,து உஙகள் உடலுக்கு தேவையான வைட்டமின்களை வழங்கி, உங்களுக்கு இதமான மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச்செய்யும் பானமாகும். குறிப்பாக இந்த குளுகுளு குளிர் காலத்துக்கு மிகவும் ஏற்றது.
கிவி ஸ்மூத்தி
கிவி பழம், யோகர்ட் இரண்டையும் கடையில் இருந்து வாங்கவேண்டும். அதை ஸ்மூத்தியாக தயாரித்து பருகவேண்டும். அதில் ஆரோக்கியமான அளவு வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். இது உங்களுக்கு புத்துணர்ச்சியையும் தரும் பானமாகும்.