காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் செய்யுங்கள்; தொளதொள தொப்பையும் கடகடவென மறையும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் செய்யுங்கள்; தொளதொள தொப்பையும் கடகடவென மறையும்!

காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் செய்யுங்கள்; தொளதொள தொப்பையும் கடகடவென மறையும்!

Priyadarshini R HT Tamil
Nov 30, 2024 01:00 PM IST

தொப்பையைக் குறைக்க காலையில் எழுந்தவுடன் செய்யவேண்டியது என்ன?

காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் செய்யுங்கள்; தொளதொள தொப்பையும் கடகடவென மறையும்!
காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் செய்யுங்கள்; தொளதொள தொப்பையும் கடகடவென மறையும்!

முதலில் இளஞ்சூடான தண்ணீரை பருகவேண்டும்

உங்கள் உடலின் வளர்சிதையை ஊக்குவிக்க, தொப்பையின் கொழுப்பைக் குறைக்க நீங்கள் இதமான தண்ணீரை காலையில் எழுந்தவுடன் பருகவேண்டும். உங்கள் உடல் வளர்சிதை மாற்றம் சிறப்பாக உள்ளது என்றால், உங்கள் உடல் அதிக கலோரிகளை எரிக்கும். இதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதிகம் கலோரிகள் எரிக்கப்பட்டால், உங்களின் உடல் எடை குறையும். கடுமையான வயிற்று தசைகள் கூட குறையும். எனவே அதிகாலையில் எழுந்தவுடன், இளஞ்சூடான தண்ணீரை மட்டும் பருகுங்கள். இது உங்கள் உடல் வளர்சிதையைத் தூண்டி, உங்கள் கல்லீரல் பித்தத்தை உற்பத்தி செய்ய உதவும். இதனால் செரிமானம் நன்றாக இருக்கும். உங்கள் உடலின் வெப்பநிலையை உயர்த்த சூடான தண்ணீர் உதவும். அது உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரித்து, உங்கள் தொப்பைக் குறைய உதவும்.

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காலை உணவு

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவு, உங்கள் உடலுக்கும் தேவையான ஆற்றலைத் தருகிறது. இது உங்கள் உடல் சிறப்பாக செயல்பட உதவுகிறது. உங்கள் காலை உணவில் சரியான அளவில் புரதச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய கொழுப்புக்கள் இருக்கவேண்டும். அது உங்கள் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவும். மேலும் உங்களுக்கு இனிப்புகள் சாப்பிடவேண்டும் என்ற ஆர்வத்தை குறைக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பீர்கள். இதை நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு உங்களுக்கு நாள் முழுவதும் ஆரோக்கியமான தேர்வுகளை தேர்ந்தெடுக்க உதவுகிறது. எப்போது நீங்கள் உணவு சாப்பிட விரும்பினாலும், ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது உங்களுக்கு நல்லது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உடற் பயிற்சிகள் கட்டாயம் செய்யவேண்டும்

உங்கள் அன்றாட வழக்கத்தில் உடற்பயிற்சிகளை இணைத்துக்கொள்ளுங்கள். உங்கள் காலை வழக்கமாக கட்டாயம் உடற்பயிற்சி என்பது இருக்கட்டும். இது உங்களின் தொப்பை குறைய கட்டாயம் உதவுகிறது. இதை ஆராய்ச்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன. காலையில் தினமும் யோகா, நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வது உங்கள் உடல் வளர்சிதையை அதிகரித்து உங்கள் உடல் கலோரிகளைக் குறைக்க உதவுகிறது. வழக்கமான உடற்பயிற்சிகள் உங்கள் உடலின் தசைகளை வலுவாக்க உதவுகிறது. இது உங்கள் உடல் கொழுப்பைக் குறைக்க உதவும். தசைகளில் உள்ள திசுக்கள், அதிக கலோரிகளைக் குறைக்கிறது. எனவே உங்களுக்கு அதிக சதைகள் இருந்தால், அதிக கலோரிகள் குறைக்கிறது. உடற்பயிற்சிகளில் கொழுப்பு திசுக்கள் குறைவான அளவு மட்டுமே எரிக்கப்படுகிறது. தசைகளை ஆரோக்கியமாக பராமரிக்கவும், கொழுப்பை குறைக்க ஆரோக்கிய சதைகள் உதவுகின்றன. உடற்பயிற்சிகளுக்கு உங்கள் மனநிலையை மாற்றும் தன்மை உள்ளது. இது உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கிறது. இது உங்கள் ஆற்றல் அளவைக் குறைக்கிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான பாதிப்பை உருவாக்குகிறது. அது உங்கள் உடலுக்கு நல்லது. இது உங்கள் தொப்பை குறையவும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது.

காலையில் எழும் நேரம்

காலையில் நீங்கள் அன்றாடம் தூங்கி எழும் நேரம் ஒரே மாதிரியானதாக இருக்கவேண்டும். நீங்கள் காலையில் செய்யும் பயிற்சிகள் உங்கள் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கும். நீங்கள் ஒரே நேரத்தில் உறங்கி ஒரே நேரத்தில் எழுவது உங்கள் உடல் கடிகாரத்தை முறைப்படுத்தும். இது உங்களுக்கு அதிகளவில் ஆழ்ந்த உறக்கத்தை உறுதி செய்யும். போதிய உறக்கம் தொப்பையைக் குறைப்பதற்கு மிகவும் அவசியமாகும். இது உங்கள் லெப்டின் மற்றும கெரிலின் ஹார்மோன்களை முறைப்படுத்துகிறது. இது உங்களின் பசி மற்றும் வயிறு நிறைவு ஆகியவற்றுக்கு தேவையானது. நீங்கள் நன்றாக உறங்கி எழுந்து, ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ளும்போது, நீங்கள் உணர்வு ரீதியாக சாப்பிடுவதை தவிர்ப்பீர்கள். உறக்கம் குறைந்தால் உங்களுக்கு டென்சன், சோர்வு ஆகியவை ஏற்படும். இதுவும் உங்கள் அடம்பிடிக்கும் தொப்பையை குறைக்க உதவாது.

தியானம்

நாள்பட்ட மனஅழுத்தம் உங்கள் உடலில் கார்டிசாலின் அளவு அதிகரிக்க காரணமாகும். இது உங்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் ஆகும். அதிக கார்டிசால் அளவு உங்கள் உடலில் கடும் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். பசியை அதிகரிக்கும், கொழுப்பை தக்கவைக்கும் திறனை அதிகரிக்கும். குறிப்பாக அடிவயிற்றில் தசை சேர்வதை கார்டிசால் தூண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே சரிவிகித உணவு, வழக்கமான உடற்பயிற்சி செய்யவேண்டும். இதைக் கடந்து நீங்கள் வரவேண்டுமெனில், நீங்கள் உங்களுக்கு மனஉளைச்சலைத்தரும் நடவடிக்கைகளை கைவிடவேண்டும். காலையில் நீங்கள் செய்யவேண்டியவற்றையுத் வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். அதனுடம் யோகா மற்றும் தியானம் உங்கள் மனதை அமைதிப்படுத்தும். உங்கள் கார்டிசால் அளவைக் குறைக்கும். உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை சமப்படுத்தும். இது உங்கள் வயிற்றில் உள்ள தொப்பையைக் குறைக்க உதவும். எனவே வழக்கமான தியானம் உங்களுக்கு ஏற்படும் பதற்றத்தைக் குறைக்கும், உங்கள் மனநிலையை மாற்றும், உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.