Japanese Techniques to aging : வயோதிகத்தை வரவிடாமல் தடுக்க ஜப்பானியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?
Japanese Techniques to aging : வயோதிகத்தை வரவிடாமல் தடுக்க ஜப்பானியர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வயோதிகத்தை தள்ளிப்போட முடியுமா என்றால், வயது ஆவதை தடுக்க முடியாது. ஆனால், வயதான தோற்றம் வருவதை தள்ளிப்போட முடியும். அதற்கு ஜப்பானியர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வயோதிக தோற்றம் தெரியாமல் இருக்க ஜப்பானியர்கள் செய்வது என்ன?
ஜப்பானியர்கள் அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் பெயர் பெற்றவர்கள், அவர்களின் இளமை தோற்றத்துக்கும் புகழ்பெற்றவர்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவர்களின் கலாச்சாரம், வாழ்வியல் முறையும், அவர்கள் நீண்ட நாட்கள் வாழவும், ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவுகிறது. வயதான தோற்றத்தை தவிர்க்க அவர்கள் சில குறிப்புகளை பின்பற்றுகிறார்கள். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உணவுப்பழக்கம்
பதப்படுத்தப்பட்ட உணவுகளை அவர்கள் குறைவாகவே உட்கொள்கிறார்கள். அதில் அதிக சர்க்கரை இல்லை. அவர்கள் ஃபிரஷ் காய்கறிகள், பழங்கள், மீன், கடல் உணவுகள், சோயா பொருட்கள் மற்றும் அரிசி உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுகிறார்கள். இந்த உணவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. இவையிரண்டும்தான் வயோதிக தோற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன.