Watch Video: ‘எங்காகிலும் பார்த்ததுண்டோ..’- ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பிற்கே சென்று ரீ கிரியேட் ஜப்பானியர்கள்!
இவர்களுடன் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த இந்தப்படம், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது.
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமாராம் பீம் ஆகியோரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ராஜூவாக ராம் சரணும், பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடித்தனர்.
இவர்களுடன் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த இந்தப்படம், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
இந்த வரவேற்பை தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜப்பானில் வெளியானது. அங்குள்ள மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற ஆர்.ஆர்.ஆர் அங்கும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. குறிப்பாக ஜப்பானில் முன்னதாக வெளியாகி அதிக வசூலை ஈட்டிய இந்திய படம் என்று சாதனை படைத்திருந்த ரஜினியின் முத்து படத்தின் வசூலை விட அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம் ஜப்பானில் வெளியாகி அதிக வசூலை ஈட்டிய இந்திய படமாக ஆர்.ஆர்.ஆர் மாறியது.
இந்தப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதையும் வென்றது. இந்த நிலையில் ஜப்பானிய ரசிகர்கள் சிலர் ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு நடத்திய இடத்திற்கு சென்று அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டு இருக்கின்றனர்.
அந்த இடத்திற்குச் செல்ல பல மணி நேரம் ட்ராவல் செய்து வந்ததாக குறிப்பிட்டு இருக்கும் அவர்கள், படத்தில் இடம் பெற்ற நட்பு பாடலையும் அவர்கள் ரீ கிரியேட் செய்து இருக்கின்றனர்.
முன்னதாக, அண்மையில் நடந்த ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கிய அமெரிக்காவை சேர்ந்த ஜிம்மி கெம்மல், ஆர். ஆர். ஆர். ஒரு பாலிவுட் படம் என்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் அவரை சமூகவலைதளங்களில் வெளுத்து வாங்கினர்.
ஆர்.ஆர்.ஆர். ஒரு தெலுங்கு படம் என்பது ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கியவருக்கு தெரியாதா? என ரசிகர்கள் கேள்வி கேட்டனர்.
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தைப் பற்றி அறிமுகம் செய்து வைத்த தீபிகா படுகோனே, “ நாட்டு நாட்டு பாடல் இந்தியர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் கதையை அடிப்படையாகக் கொண்ட 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் தெலுங்கில் வந்தது. நாட்டு நாட்டு பாடல் உங்களுக்குத் தெரியாவிட்டால் இப்போது தெரியும்” என்றார்.
ஆஸ்கர் மேடையில் கால பைரவாவும், ராகுல் சிப்லிகஞ்சும் பாடி, நடனமாடிய பிறகு அரங்கத்தில் இருந்த பிரபலங்கள் அனைவரும் நின்று கைதட்டினர். ஓரிரு நிமிடங்கள் நின்று கைதட்டல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்