என்ன கொடுமை இது! இந்தியாவில் பட்டினியால் வாடும் மனிதகுலம் அதிகம்; உற்பத்தியாகும் உணவு அதிகம்.. வீணாவதும் அதிகம்!
இந்தியாவில், 4ல்1வர் சத்துக்குறைவால் (Malnutrition)பாதிக்கப்பட்டுள்ளார். உணவு பற்றாக்குறையின் காரணமாக நாளுக்கு 3,000 பேர் இறக்கின்றனர். 23 கோடி பேர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். தினமும் 15% பேர் உணவின்றி பட்டினியால் தவிக்கின்றனர்.

இந்தியாவில் பட்டினியால் வாடும் மனிதகுலம் அதிகம்
இந்தியாவில் பட்டினியால் வாடுவோர் மிக அதிகமாக இருந்தும்,சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபை -United Nations Food Waste Index Report-அறிக்கையில்,இந்தியாவில் ஒவ்வொரு வருடமும்,78.2 மில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுவதாக குறைகூறுகிறது.
எதிர்வரும் International Day of zero waste தினத்தை ஒட்டி,ஐ.நா. சூழல் திட்ட அறிக்கையில்,இந்தியாவில், ஒவ்வொரு வருடமும், தலைக்கு 55 கிலோகிராம்/ஆண்டு உணவு வீணடிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில்,பாகிஸ்தானில், ஆண்டுக்கு,தலைக்கு 130 கிலோ உணவு வீணாகிறது என்றும்,பூட்டானில் ஆண்டுக்கு,தலைக்கு 19 கிலோகிராம் உணவு மட்டுமே வீணாவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.