Idly : பட்டர் பிஸ்கட் மாதிரி வாயில் வைத்தவுடன் கரைந்து ஓடும் இட்லி வேண்டுமா? பஞ்சு போல் செய்ய பக்குவம் இதுதான்!-idly want an idly that melts in your mouth like a butter biscuit this is the ripeness to make like a sponge - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Idly : பட்டர் பிஸ்கட் மாதிரி வாயில் வைத்தவுடன் கரைந்து ஓடும் இட்லி வேண்டுமா? பஞ்சு போல் செய்ய பக்குவம் இதுதான்!

Idly : பட்டர் பிஸ்கட் மாதிரி வாயில் வைத்தவுடன் கரைந்து ஓடும் இட்லி வேண்டுமா? பஞ்சு போல் செய்ய பக்குவம் இதுதான்!

Priyadarshini R HT Tamil
Sep 24, 2024 09:50 AM IST

Idly : பட்டர் பிஸ்கட் மாதிரி வாயில் வைத்தவுடன் கரைந்து ஓடும் இட்லி வேண்டுமா? பஞ்சு போல் செய்ய பக்குவம் இதுதான். ரேஷன் அரிசியே கூட போதும்.

Idly : பட்டர் பிஸ்கட் மாதிரி வாயில் வைத்தவுடன் கரைந்து ஓடும் இட்லி வேண்டுமா? பஞ்சு போல் செய்ய பக்குவம் இதுதான்!
Idly : பட்டர் பிஸ்கட் மாதிரி வாயில் வைத்தவுடன் கரைந்து ஓடும் இட்லி வேண்டுமா? பஞ்சு போல் செய்ய பக்குவம் இதுதான்!

கருப்பு உளுந்தை மேரில் ஊறவைத்து அரைத்து இட்லி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தயிரின் தண்ணீர் மற்றும் மசாலாக்கள் சேர்த்து இட்லி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் நவீன இட்லி நமக்கு இந்தோனேசியாவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அங்குதான் புளிக்க வைத்து உணவு தயாரிக்கும் முறை பாராம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவில் இந்து அரசர்கள் அமர்த்திய சமையல் கலைஞர்கள் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம். அங்கிருந்து இந்த உணவு இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தோனேசியாவில் கெட்லி என்ற உணவு இட்லிபோலேவே இருக்கும் என்று வரலாறு கூறுகிறது. மேலும் புளிக்கவைக்கும் செயல்பாடு இயற்கையில் நடக்கும் ஒன்று என்பதால் அது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இங்கு அனைத்து கலாச்சாரங்களிலும் புளிக்க வைக்கும் பழக்கம் உள்ளது.

பஞ்சுபோன்ற மெத் மெத் என்ற இட்லி அரைக்க வேண்டுமெனில் வழக்கமாக நீங்கள் இட்லிக்கு சேர்க்கும் மாவுடன் இந்த இரண்டு பொருட்களை மட்டும் கூடுதலாக சேர்க்கவேண்டும்.

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – ஒரு கப்

பச்சரிசி – ஒரு கப்

உளுந்து – ஒரு கப்

மாவு ஜவ்வரிசி – அரை கப்

அவல் – அரை கப்

வெந்தயம் – கால் ஸ்பூன்

(கெட்டி அவல் அல்லது ஸ்பான்ச் அவல் என எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)

செய்முறை

அனைத்தையும் தனித்தனியாக ஊறவைக்கவேண்டும். அரிசி மற்றும் உளுந்தை 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். ஜவ்வரிசியையும் 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். அவலை அரைக்கப்போகும் 10 நிமிடம் முன்னர் ஊறவைத்தால் போதும்.

ஊறவைத்த அனைத்தையும் அரைத்து எடுக்கவேண்டும். உளுந்துடன் ஜவ்வரிசி, அவல், வெந்தயம் என அனைத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதை மிக்ஸி அல்லது கிரைண்டர் என எதில் வேண்டுமானாலும் அரைத்து எடுத்துக்கொள்ளலாம். முதலில் உளுந்து, அடுத்து அரிசி என இரண்டையும் தனித்தனியாக வெண்ணை போல் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதை 8 மணி நேரம் புளிக்க விடவேண்டும்.

ரேஷன் கடையில் வாகும் அரிசி என்றால் மிக்ஸியில் அரைக்கும்போது 5 முதல் 6 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். கிரைண்டரில் அரைக்க 4 மணி நேரம் ஊறவைத்தால் போதும். அரைத்த மாவில் கல்லுப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். மாவு நன்றாக பந்துபோல் பொங்கி இருக்கவேண்டும்.

இதுபோன்ற இட்லி மாவில் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து அரைக்கும்போது இட்லி நன்றாக இருக்கும். இட்லி பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து இட்லியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

இட்லி பொதுவாக செரிமானம் எளிதில் ஆகக்கூடிய ஒரு உணவு. செரிமான கோளாறு உள்ளிட்ட வயிறு கோளாறு உள்ளவர்கள் இதை அதிகம் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு கல்போல் அல்லது களி போல் இல்லாமல் நல்ல சாஃப்ட்டாக இருக்க வேண்டுமெனில் இதுபோன்ற இட்லியை செய்துகொடுங்கள். இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.