Hunger Issues : உலக பட்டினியைப் போக்க உள்ளூர் தீர்வுகள் அவசியம்! - அறிஞர்கள் அறிவுரை!
Hunger Issues : உலக பட்டினியைப் போக்க உள்ளூர் தீர்வுகள் அவசியம் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
உலக சந்தை பொருளாதாரம்
உலக பட்டினியை போக்க உள்ளூர் தீர்வுகள் அவசியம் என உலக சந்தை பொருளாதாரம் உள்ளூர் தீர்வுகளை அழிக்க முற்படுவதை மக்கள் நல அரசுகள் முறியடிக்க வேண்டும் என உலக நீடித்த உணவு பாதுகாப்பை வலியுறுத்தும் நிறுவனம் கோரிக்கைவிடுத்துள்ளது.
30 சதவீதம் உலக மக்கள் உணவு தட்டுப்பாட்டை (Food insecurity) எதிர்நோக்கியுள்ளதாகவும், மேலும் 600 மில்லியன் கூடுதல் மக்கள் 2030ல் பட்டினியை எதிர்நோக்கி இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனால், 2030ல் பட்டினியில்லா உலகத்தை அமைக்கும் நோக்கம் நிறைவேறாது என்ற அச்சம் எழுந்துள்ளது.
கார்ப்ரேட் நிறுவனங்கள்
மத்திய அல்லது மாநில அரசுகள், World Trade Organization's Agreement on Agriculture (AOA)ன்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் சலுகைகள் அளித்து, அதன் மூலம் உள்ளூர் உணவு சந்தைகளை முடக்க முயல்வது, சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, நீடித்த உணவு சந்தையை உள்ளூர் மக்களுக்கு பன்முகத்தன்மையுடன் அளித்து வரும் உள்ளூர் உணவு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, உள்ளூர் பொருளாதாரத்தை பெருமளவு பாதிப்பதோடு, பசி அல்லது பட்டினி கொடுமையை அதிகப்படுத்த முடியும் என்பதால், International Panel of Experts on Sustainable Food System(IPES-Food) நிபுணர்கள், மக்கள் நல அரசுகள் உள்ளூர் உணவு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளித்து, அவர்களுக்கான உதவிகளை செய்து, பன்முகத்தமை, செலவு குறைவு, குறைந்த இடுபொருளுடன் உணவு உற்பத்தியை அதிகப்படுத்துவது, உள்ளூர் மக்கள் மற்றும் சமுதாயத்துடன் இணைந்து பணியாற்றும் உள்ளூர் சிறுதொழில் செய்யும் உணவு உற்பத்தியாளர்கள் மூலம் பசி அல்லது பட்டினிக் கொடுமைக்கு தீர்வுகாண முடியும் என அறிவுறுத்தியுள்ளனர்.
உள்ளூர் உணவு உற்பத்தியாளர் அமைப்பு Territorial Markets என அவர்கள் அழைக்கின்றனர்.
உள்ளூர் உணவு சந்தை
உள்ளூர் உணவு சந்தை (Territorial Markets), மூன்றில் ஒரு பங்கு வேளாண் நிலப்பரப்பு மற்றும் வளங்கள் மூலம் உலகின் 70 சதவீதம் மக்களுக்கு உணவளித்து, பசியைப் போக்கும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தனியான ஆய்வு ஒன்று உலகின் உணவு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் நான்கில் மூன்று பேர், நகர்ப்புற மற்றும் நகர்புறத்தை சுற்றியுள்ள (Peri-urban region) பகுதியில் வசிப்பதாகவும், (1.7 பில்லியன் மக்கள்), அவர்களை குறிவைத்து அரசுகள் சரியான திட்டங்களைத் தீட்டி அவர்களது பட்டினி பிரச்னையை தீர்க்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை அந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
உள்ளூர் உணவு உற்பத்தி மையங்கள் மற்றும் சிறு தொழில் உற்பத்தியாளர்கள், உணவு பாதுகாப்பையும், பட்டினிப் பிரச்னைக்கு தீர்வு காணும் அமைப்புகளாக விளங்குவதாகவும், IPES-Food நிபுணர் சல்மாலி கட்டல் (Shalmali Guttal) அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், பெரிய அமைப்பு என்றாலே "சிறந்த அமைப்பு" என்பது உண்மையல்ல என்றும், உள்ளூர் உணவு உற்பத்தி அமைப்புகளுக்கு அரசு ஊக்கமளித்து, கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து அவற்றை காக்க அரசுகள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல சமயம் அரசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கை கோர்த்து அவர்களுக்கு சலுகைகள் அளித்து, கொள்கை ரீதியாக அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் மட்டுமே உள்ளூர் மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிசெய்து பசி அல்லது பட்டினியை பெரிதளவு குறைக்கும் உள்ளூர் உணவு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
கேரள மாதிரி
கேரளாவில் கொரோனாவின்போது, அந்த மாநில அரசு, பெண்கள் நடத்தும் 1,000 Janakeeya உணவகங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 70,000 சாப்பாடுகளை தயாரித்து Kudumbashree பெண்கள் அமைப்பு மூலம் உள்ளூர் மக்களுக்கு விநியோகித்தது உள்ளூர் அமைப்புகளின் மீள்தன்மைக்கு (Resilient) உதாரணமாக உள்ளது.
ஆனால், இந்தியா அல்லது தமிழகத்தில் ரத்தசோகையை தவிர்க்க உள்ளூர் தீர்வுகளுக்கு (கருவேப்பிலை ,முருங்கைக்கீரை) பதிலாக செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க நினைப்பது எப்படி சரியாகும்?
தேசத்தந்தை காந்தியின் கருத்தான உள்ளூர் பொருளாதாரத்தை சீர்தூக்கி பிடிப்பது காலத்தின் கட்டாயம்.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்