தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beauty Tips; கை கால் முட்டி கருமையை இயற்கை வழியில் சுலபமாக நீக்குவது எப்படி?

Beauty Tips; கை கால் முட்டி கருமையை இயற்கை வழியில் சுலபமாக நீக்குவது எப்படி?

I Jayachandran HT Tamil
Apr 26, 2023 11:16 AM IST

கை கால் முட்டி கருமையை இயற்கை வழியில் சுலபமாக நீக்குவது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

முட்டி கருமை
முட்டி கருமை

ட்ரெண்டிங் செய்திகள்

உடலின் சில பகுதிகள் கருப்பாக மாறும். அதிலும் முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் கழுத்து பகுதிகள் எளிதில் கருத்து போகும். தனி கவனம் எடுத்து இந்த பகுதிகளைப் பராமரிக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இல்லையெனில், அவற்றின் நிறம் இன்னும் கருமையாகி விடும். அந்த பகுதிகளைச் சுத்தமாக மற்றும் பளபளப்பாக வைத்திருக்க ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம்.

பெரும்பாலான இயற்கை பொருட்கள் சருமத்துக்கு நல்லவை. ஆனால் அவை சரும வகைக்கு ஏற்ப மாறுப்பட்டு செயல்படுகின்றன. மார்க்கெட்டில் விற்கப்படும் சில பொருட்கள் சருமத்துக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். 

அதனால் அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எனவே, இன்று இந்த பதிவில் வீட்டிலேயே ஸ்க்ரப் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம். அத்துடன் கை மற்றும் கால்களின் முட்டி பகுதி கருமையாக மாறுவதற்கான காரணம் மற்றும் அதை சரிசெய்யும் முறைகள் குறித்தும் பார்ப்போம்.

முட்டி பகுதி கருப்பாக மாற காரணங்கள்

நாம் முறையாக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்காத போது அந்த பகுதி கருப்பாக மாற தொடங்குகிறது.

சூரிய ஒளியின் அதிகப்படியான வெளிப்பாடு காரணமாக, தோலின் நிறம் கருமையாக மாற தொடங்குகிறது. அதாவது ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்னை ஏற்படுகிறது.

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், உடலின் சில பாகங்களின் நிறம் மாறுகிறது.

சில நேரங்களில் பயன்படுத்தும் பொருளின் விளைவு காரணமாக தோலின் நிறம் கருமையாகிறது.

புற ஊதா கதிர்வீச்சு தோலில் மெலஸ்மா பிரச்சயை ஏற்படுத்துகிறது.

இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள்

எண்ணெய்கள் சருமத்துக்கு பல வழிகளில் நன்மை செய்கின்றன. அதனால்தான் எண்ணெய்கள் சரும பராமரிப்பு முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எண்ணெய்களில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் கருமையானப் பகுதிகளை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகின்றன.

கருமையை நீக்கும் பேஸ்ட் செய்யத் தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் – 3-4 டீஸ்பூன்

எள்ளு – சிறிதளவு

ஆலிவ் ஆயில் – 1-2 டீஸ்பூன்

தகருமையை நீக்கும் பேஸ்ட் யாரிக்கும் முறை

முதலில் தேங்காய் எண்ணெய்யுடன் ஆலிவ் ஆயில் மற்றும் எள்ளு சேர்க்கவும். இவற்றை நன்கு கலந்து பேஸ்ட் போல் தயார் செய்யவும். இப்போது வீட்டிலேயே தயாரித்த பேக் தயார்.

கருமையை நீக்கும் பேஸ்ட் பயன்படுத்தும் முறை

இந்த பேக்கை கை மற்றும் காலின் முட்டி பகுதியில் தடவவும்.

பின்பு அந்த பகுதியை நன்கு தேய்க்கவும். இதனால் அது சருமத்தில் உறிஞ்சப்படும்.

இப்போது வெதுவெதுப்பான நீரில் பேக்கை சுத்தம் செய்யவும்.

சருமத்திற்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

கை மற்றும் கால் பகுதிகள் வறண்டு இருந்தால் நீங்கள் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தலாம். ஆலிவ் ஆயில் வறட்சியை குறைக்க உதவும்.

ஆலிவ் ஆயிலை சருமத்தில் தடவுவதன் மூலம் சரும பாதிப்புகளைத் தடுக்கலாம். இது எண்ணெய் தடுப்பானாக செயல்பட்டு சருமத்தைப் பாதுக்காக்கும்.

முகத்துடன் கை மற்றும் கால்களின் முட்டி பகுதியையும் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதனால் இறந்த சரும செல்கள் நீங்கி சருமம் சுத்தமாக காட்சியளிக்கும். ஓட்ஸை மிக்ஸியில் நைஸாக அரைத்து வீட்டிலேயே ஸ்க்ரப் செய்யலாம்.

முகத்துடன், முழங்கைகளையும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும். இதற்கு மாய்ஸ்சரைசர் க்ரீம் அல்லது மார்க்கெட்டில் கிடைக்கும் வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.

சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த மறக்காதீர்கள். இல்லையெனில் உங்கள் சருமம் பொலிவிழந்தது போல் காட்சியளிக்கும்.

நீங்கள் குளிக்கும் போதெல்லாம், கை மற்றும் கால்களின் முட்டி பகுதியை நன்றாக தேய்த்து குளிக்கவும். இதனால் அவை சுத்தமாக இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்