Breast Cancer Prevention: அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய் பாதிப்பு! தடுக்கும் வழிமுறைகள் என்ன?
Breast Cancer Prevention: உலக அளவில் பல்லாயிரக்கணான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறியும் போது குணப்படுத்த முடியும் என தேசிய புற்றுநோய் நிறுவனம் தெரிவிக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்த வருகிறது. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் பலர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் பல்லாயிரக்கணான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறியும் போது குணப்படுத்த முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.இந்த வகை புற்றுநோயை வரவிடாமல் முன் கூட்டியே தடுக்கும் முறைகளையும் இந்நிறுவனம் வெளியுட்டுள்ளது.
மார்பக புற்றுநோய் என்பது மார்பகத்தின் திசுக்களில் வீரியம் மிக்க (புற்றுநோய்) செல்கள் உருவாகும் ஒரு நோயாகும். பெண்களுக்கு உண்டாகும் பொதுவான புற்றுநோய் வகைகளில் ஒன்றாக இது உள்ளது. இதை தடுக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொகுத்துள்ளது. அந்த தொகுப்பு பின்வருமாறு.
ஆபத்து காரணிகள்
பொதுவாக புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய ஆபத்து காரணிகளைத் தவிர்ப்பது சில புற்றுநோய்களைத் தடுக்க உதவும். புகைபிடித்தல், உடல் பருமன், போதுமான உடற்பயிற்சி செய்யாதது ஆகியவை இதில் அடங்கும்.
மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது. எனவே வயதான காலத்தில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 30 வயதை கடந்த அனைத்து பெண்களும் ஸ்கிரீனிங் எனப்படும் சோதனையை குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்து பார்க்க வேண்டும். தங்களது குடும்பத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வர அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிகுறிகள்
தேசிய புற்றுநோய் நிறுவனம் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள அறிகுறிகளை வகுத்துள்ளது. அதன் படி 12 வயதிற்கு முன்பே மாதவிடாய் தொடங்ககிய பெண்களுக்கு வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 35 வயதிற்கு மேல் ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறப்பதால், அப்பெண்ணின் உடலில் மார்பக திசு நீண்ட காலத்திற்கு அதிக ஈஸ்ட்ரோஜனுடன் வெளிப்படும். இதுவும் மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பை ஏற்படுத்தகிறது.
20 முதல் 30 வயதுகக்குள் குழந்தைகள் பெற்றெடுக்கும் பெண்களுக்கு இயற்கையாகவே மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது. எனவே இது போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். சிறந்த உடற்பயிற்சி மார்பக புற்றுநோயை வார விடாமல் தடுக்கும் சிறந்த வழிமுறையாகும்.
தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதும் மார்பக புற்றுநோயை உண்டாக்கும். குழந்தை இல்லாத பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். கருத்தடை மாத்திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் மார்பக புற்றுநோய் கூட வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்