World Rhino Day 2024: ஒற்றை கொம்பு காண்டாமிருகளின் தாயகமாக இந்தியா..தேசிய பூங்காக்கள் எங்கு உள்ளது?
World Rhino Day 2024: ஒற்றை கொம்பு காண்டாமிருகளின் தாயகமாக இந்தியா இருந்து வருகிறது. காண்டாமிருகள் உலா வரும் தேசிய பூங்காக்கள் எங்கு உள்ளது? வரலாறு முதல் முக்கியத்துவம் வரை, உலக காண்டமிருகம் தினம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.
காண்டாமிருகம் காட்டில் வாழும் அற்புதமான மிருகங்களில் ஒன்றாகு். குண்டான தோற்றத்தில் முரடான தோற்றத்தில் இருக்கும் காண்டாமிருகங்கள், அவற்றின் தனித்துவம் மிக்க வளவளப்பான தோல், மூக்கு பகுதியில் உல்ள கொம்பு போன்றவற்றால் தனித்துவமான அடையாளத்தை பெற்றவையாக இருக்கின்றன.
அதிக பேரால் விரும்பப்படும் காட்டு விலங்காக இருந்து வரும் காண்டாமிருகள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியான விஷயமாகவே உள்ளது. வேட்டையாடுதல், காட்டு அழிப்பு மற்றும் பிற மனிதாபிமானமற்ற பழக்கவழக்கங்களால், காண்டாமிருகம் பூமியில் அழிந்து வரும் விலங்குகளின் வரிசையில் ஒன்றாக இருக்கிறது.
காண்டாமிருகளுக்கு எதிரான நடைமுறைகள் சட்டவிரோதமானது என்றாலும் அழிந்துபோகும் இந்த இனத்தை காப்பாற்ற மனிதர்கள் அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டும். அன்பான விலங்கினங்களில் ஒன்றாக இருக்கும் காண்டாமிருகங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக காண்டாமிருக தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான நாளைக் கொண்டாடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் பார்க்கலாம்
உலக காண்டாமிருகம் தினம் வரலாறு
காண்டாமிருகத்தின் அழிவு நிலைானது 1990இல் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 2010 காலகட்டத்தில் இது நாடு தழுவிய ஆபத்தாக மாறியது, மேலும் இதுகுறித்து விலங்குகள் ஆர்வலர்கள், பொதுமக்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்த தொடங்கினர். பூமி பந்தில் அந்த நேரத்தில் 30 ஆயிரம் காண்டாமிருகங்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாக கூறப்பட்டது. எனவே காண்டாமிருகங்கள் அழிவது குறித்த நெருக்கடி நிலைமை விரைவில் கவனிக்கப்பட்டது.
அந்த நேரத்தில், தென் ஆப்பரிக்காவில் இயங்கி வந்த உலக வனவிலங்கு நிதியம் உலக காண்டாமிருக தினத்தை அறிவித்தது. இந்த நாளில் காண்டாமிருகம் அழிவு தொடர்பாக எழுந்திருக்கும் நெருக்கடி மற்றும் இந்த விலங்குகளை காப்பாற்றுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.
2011 ஆம் ஆண்டில், லிசா ஜேன் கேம்ப்பெல் என்ற பெண் தனது சக காண்டாமிருக காதலரான ரிஷ்ஜாவுக்கு ஒரு கடிதம் எழுதினார், உலகில் குறைந்தது ஐந்து வகையான காண்டாமிருகங்களையாவது பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். எனவே, உலக காண்டாமிருக தினம் ஒரு உலகளாவிய நிகழ்வாக மாறியது. ஆண்டுதோறும் செப்டம்பர் 22 அன்று உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.
உலக காண்டாமிருகம் தினம் முக்கியத்துவம்
இந்த நாளில் காண்டாமிருகத்தை பாதுகாப்பத்தில் கவனம் செலுத்தும் அமைப்புகள் ஒன்றிணைந்து, காடுகளில் காண்டாமிருகங்களின் அவலநிலை மற்றும் இந்த விலங்குகளை அழிந்து போகாமல் பாதுகாக்க மனிதர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
உலகின் காண்டாமிருக மக்கள்தொகையில் கணிசமான பகுதி இந்தியாவாக இருப்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பாதுகாவலர்கள் மற்றும் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்கு இந்த நாள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் தாயகமான இந்தியாவில், இந்த நாளில் காசிரங்கா தேசிய பூங்கா போன்ற வாழ்விடங்களைப் பாதுகாப்பது, வேட்டையாடுதல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளை ஆதரிப்பது போன்றவற்றை முக்கியமாக வலியுறுத்துகிறது.
உலக காண்டாமிருகம் தினம் 2024 கருபொருள்
உலக காண்டாமிருக தினம் 2024க்கான கருபொருள் "காண்டாமிருகங்களைப் பாதுகாத்தல்: சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்தல்" என்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கருப்பொருள் சுற்றுச்சூழல் அமைப்பில் காண்டாமிருகங்களின் முக்கியத்துவத்தையும் உலகளாவிய பாதுகாப்பு முயற்சிகளின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவில் இருக்கும் காண்டாமிருங்கள் எண்ணிக்கை
இந்திய காண்டாமிருகம் என்றும் அழைக்கப்படும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் தாயகமாக இந்தியா உள்ளது, இது பெரும்பாலும் அசாமில் காணப்படுகிறது. சமீபத்திய தகவலின்படி, இந்தியாவில் 2024இல் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை நிலையானதாக இருப்பதாகவும், தோராயமாக 3,262 காண்டாமிருகங்கள் உள்ளன எனவும் கூறப்படுகிறது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக திகழும் காசிரங்கா தேசிய பூங்கா, உலக காண்டாமிருகள் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களைக் கொண்டுள்ளது. மற்ற குறிப்பிடத்தக்க பகுதிகளில் மனாஸ் தேசிய பூங்கா, போபிடோரா வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஒராங் தேசிய பூங்கா ஆகியவை அடங்கும்.
உலக காண்டாமிருக தின கொண்டாடுவது எப்படி?
காண்டாமிருகங்களைப் பார்க்க வனவிலங்கு பூங்காவுக்கு செல்வது, காண்டாமிருகத்தை தத்தெடுப்பது, காண்டாமிருகம் வேட்டையாடுதல் எதிர்ப்பு நடவடிக்கைகள், வாழ்விட மறுசீரமைப்பு மற்றும் சமூகக் கல்வி ஆகியவற்றை ஆதரிக்கும் முன்முயற்சிகளுக்கு பங்களிப்பு செய்தல் போன்ற செயல்களின் மூலம் இந்த நாளை கொண்டாடலாம்.
இந்தியாவில் இருக்கும் காண்டாமிருக பூங்காக்கள்
காசிரங்கா தேசியப் பூங்கா (அஸ்ஸாம்): இந்தியாவின் வனவிலங்கு சரணாலயங்களின் மணிமகுடமாக அறியப்படும் காசிரங்காவில் சுமார் 2,500 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. இது உலகிலேயே இந்த இனத்தின் மிகப்பெரிய மக்கள்தொகையாகும். இந்த பூங்கா அதன் பயனுள்ள வேட்டையாடுதல் எதிர்ப்பு உத்திகள் மற்றும் பாதுகாப்பு திட்டங்களுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மனாஸ் தேசிய பூங்கா (அஸ்ஸாம்): யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மனாஸ் தேசிய பூங்கா ஒரு காலத்தில் செழிப்பான காண்டாமிருக வாழ்விடமாக இருந்தது, ஆனால் இப்போது அது வேட்டையாடுதல் காரணமாக மக்கள் தொகையில் கடுமையான சரிவைக் கண்டுள்ளது. இருப்பினும், இடமாற்றத் திட்டங்கள் மற்றும் வேட்டையாடுதல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம், இங்குள்ள காண்டாமிருகங்களின் எண்ணிக்கை படிப்படியாக மீட்டெடுக்கப்படுகிறது.
போபிடோரா வனவிலங்கு சரணாலயம் (அஸ்ஸாம்): போபிடோரா சரணாலயம் அளவில் சிறியது, ஆனால் அசாமில் காண்டாமிருகங்களின் அதிக அடர்த்தியைக் கொண்டுள்ளது. காண்டாமிருகங்களை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் பார்க்க விரும்பும் வனவிலங்கு பிரியர்களுக்கு இந்த பூங்கா ஒரு பிரபலமான இடமாகும்.
ஒராங் தேசியப் பூங்கா (அஸ்ஸாம்): அஸ்ஸாமில் உள்ள மற்றொரு பூங்காவான ஒராங் தேசியப் பூங்கா, காண்டாமிருகங்களின் எண்ணிக்கையில் சிறியது ஆனால் பெருகி வருகிறது. இங்குள்ள பாதுகாப்பு முயற்சிகள் வாழ்விட மறுசீரமைப்பு மற்றும் மனித-விலங்கு மோதலைக் குறைப்பதில் கவனம் செலுத்துகின்றன.
டாபிக்ஸ்