Top 8 Benefits of Thuthuvallai : சளி, இருமல் மட்டுமா? புற்றுநோய் வரை கட்டுப்படுத்தும் தூதுவளையில் உள்ள 8 நன்மைகள்!
Benefits of Thuthuvallai : சளி, இருமல் மட்டுமா? புற்றுநோய் வரை கட்டுப்படுத்தும் தூதுவளையில் உள்ள 8 நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
தூதுவளை அல்லது தூதுவளைக்கீரை எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தூதுவளை சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளை சரிசெய்ய பயன்டுத்தப்படுகிறது. இது ஒரு மூலிகை ஆகும். சளியை குணப்படுத்த இதை வைத்து வீட்டிலேயே கஷாயம் தயாரிக்கலாம். சூப், சட்னி, ரசம், துவையல் என அனைத்தும் செய்யலாம். இந்தச் செடி முட்கள் நிறைந்தது. இலைகளிலும் முட்கள் இருக்கும். எனவே பறிக்கும்போது கவனம் தேவை. வீட்டில் வளர்த்தாலும் கவனமுடன் கையாளவேண்டும். இதன் பூக்கள் வாடாமல்லி நிறத்தில் இருக்கும். இதில் ஸ்டிராய்ட்கள், டிரிட்டர்பினாய்ட்கள், சர்க்கரை, அமினோ அமிலங்கள், சாப்போனின்கள், ஃபினோலிக் உட்பொருட்கள் உள்ளன. மேலும் இதில் சோபாட்டம், சோலைன், சோலாசோடின், டியோசோஜெனின் போன்ற வேதிப்பொருட்களும் உள்ளன. காய்ந்த தூதுவளைப்பொடியில் சாப்போனின்கள், ஃபைட்டோஸ்டிரோல்க, டானின்கள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் உள்ளன.
ரசம் வைக்கப்பயன்படுத்தப்படுகிறது. வழக்கமான ரசத்தில் இந்த இலையை அரைத்து கலந்துவிடுகிறார்கள். மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப் தயாரிக்கும்போது சளியைக் கட்டுப்படுத்தும் இதன் திறன் வலுப்பெறுகிறது. இதனால் மூக்கடைப்பு, நெஞ்சு சளி, கபம், இருமல், சைனஸ் தொற்று போன்றவை கட்டுப்படுத்தப்படுகின்றன.
தூதுவளையின் மருத்துவ பயன்பாடுகள்
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
தூதுவளையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவை உட்கொள்ளும்போது நமது உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடன்கள், வயோதிகத்தை ஏற்படுத்தும் ஃப்ரி ராடிக்கல்களை சேதப்படுத்துகின்றன. எனவே நீங்கள் தூதுவளையை எப்படி சாப்பிட்டாலும் அது உங்கள் உடலுக்கு நன்மை கொடுக்கிறது.
கொசுவை விரட்டுகிறது
தூதுவளையின் சாறை நமது உடலில் தடவிக்கொண்டால் அது மலேரியாவை ஏற்படும் அனோஃபெலிஸ் கொசுக்களை அடித்துவிரட்டும் தன்மைகொண்டது. கொசுக்கள் அதிகம் உள்ள இடத்தில் தூதுவளையின் சாறை தெளித்தால், அது முட்டையிடுவதையும் தடுக்கும். அதன் அடர்த்தியைப்பொருத்து 30 முத 90 சதவீத கொசுக்களை அழிக்கும் தன்மைகொண்டது.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
தூதுவளைச் சாறில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. உடலில் உங்களுக்கு எங்கேனும் வீக்கம் இருந்தால், தூதுவளையில் சூப் அல்லது ரசம் வைத்து அடிக்கடி சாப்பிட லேண்டும். அது அந்த வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவும்.
பாக்டீரியாக்களுக்கு எதிரான உட்பொருட்கள்
தூதுவளையின் அனைத்து பாகங்களும் பாக்டீரியாக்களுக்கு எதிரானவைதான். அதன் மலர்கள், பழங்கள், இலைகள் என அனைத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக வீரியத்துடன் போராடுகிறது. தூதுவளைச்சாறு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய்க்கு எதிரான குணங்கள்
தூதுவளையில் நீரிழிவு நோய்க்கு எதிரான குணங்கள் நிறைய உள்ளது. தூதுவளை ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதுடன், உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. நீரிழிவு நோயாளிகள் அன்றாட பயன்பாட்டில் தூதுவளையைச் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆஸ்துமாவுக்கு எதிரான குணங்கள்
ஆஸ்துமாவை குணப்படுத்துவதில் தூதுவளை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சூப் வைத்து ஆஸ்துமா பாதித்தவர்கள் எடுத்துக்கொண்டால் நல்லது. இதை ஆராய்ச்சிகளும் நிரூபித்துள்ளன. மூச்சுத்திணறல், இருமல் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மைகொண்டது.
புற்றுநோய்க்கு எதிரான குணங்கள்
தூதுவளை புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் கொண்டது. இதில் உள்ள சோபாட்டம் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை தடுப்பதுடன், புற்றுநோய் இருந்தால், அதன் செல்களின வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்கி, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுக்கின்றன.
உடலுக்கு பாதுகாப்பு
தூதுவளையை நமது உணவில் அன்றாடம் எடுத்துக்கொண்டால், அது நமது நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க உதவுகிறது. பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. உடலில் கொழுப்பு சேர்வதை தூதுவளை தடுக்கிறது. உடலில் கொழுப்பு சேர்வதால்தான் ஃப்ரி ராடிக்கல்களை செல்கள் அழிக்கிறது. எனவே நமது உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரித்து, ஆரோக்கியத்துடன் வாழவேண்டுமெனில், தூதுவளையை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்