உடலுக்கு வலிமை தரும் காய்கறி சூப் செய்வது எப்படி? சிம்பிள் ரெசிபி இதோ!
குழந்தைகள் குழம்புகளில் உள்ள காய்கறிகளையே சாப்பிடாமல் தவிர்ப்பதுண்டு. இந்த நிலையில் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் கிடைப்பதில்லை. காய்கறி சூப் செய்து கொடுக்கும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.
காய்கறிகள் எப்போதும் உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் காய்கறிகள் சாப்பிட வேண்டும் என மருத்தவர்களே பரிந்துரை செய்வதுண்டு. சில சமயங்களில் குழந்தைகள் குழம்புகளில் உள்ள காய்கறிகளையே சாப்பிடாமல் தவிர்ப்பதுண்டு. இந்த நிலையில் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் கிடைப்பதில்லை. காய்கறி சூப் செய்து கொடுக்கும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். இதனை செய்யும் முறையை தெரிந்து கொள்ள முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
2 கேரட்
10 to 12 பீன்ஸ்
1 கப் சோளம்
கால் கப் முட்டைகோஸ்
கால் கப் பெரிய வெங்காயம்
1 டேபிள்ஸ்பூன் சோள மாவு
2 பல் பூண்டு
தேவையான அளவு மிளகுதூள்
தேவையான அளவு ஸ்பிரிங் ஆனியன்
1 டேபிள்ஸ்பூன் சோயாசாஸ்
தேவையான அளவு சூப் ஸ்டிக்ஸ்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
முதலில் அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அரை கப் அளவு சோளத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய்யை சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பூண்டின் பச்சை வாசம் போனதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள கேரட் பீன்ஸ் சோளம் மற்றும் முட்டை கோசை அதில் போட்டு கிளறவும். பிறகு அரைத்து வைத்துள்ள சோளத்தை அதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இதனால் சூப் நன்றாக கெட்டியான நிலையில் இருக்கும்.
இப்பொழுது இந்த கலவையுடன் 5 கப் அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மூடி போட்டு சுமார் 20 நிமிடம் வரை காய்கறிகளை வேக விடவும். 20 நிமிடத்திற்குப் பிறகு திறந்து பார்த்தால் காய்கறிகள் நன்றாக வெந்திருக்கும். காய்கறிகள் வேகாமல் இருந்தால் இன்னும் ஒரு 4 அல்லது 5 நிமிடம் வேக விடவும். சூப் தண்ணியாக இருந்தால் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கின்ற சூப்புடன் சேர்த்து கலக்கி இன்னும் ஒரு 3 நிமிடம் வரை கொதிக்க விடவும். 3 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு மிளகுதூள் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். சூப்பை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் நறுக்கி வைத்துள்ள ஸ்பிரிங் ஆனியன் தூவி ஒரு கலக்கு கலக்கி இறக்கவும். இப்பொழுது உங்கள் சூடான சுவையான மற்றும் சத்தான வெஜிடபிள் சூப் தயார். இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சூப் ஸ்டிக்ஸ்லோடு பரிமாறலாம். இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
டாபிக்ஸ்