சாப்பிடத் தூண்டும் சாக்லேட் பிரவுனி! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! சூப்பர் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சாப்பிடத் தூண்டும் சாக்லேட் பிரவுனி! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! சூப்பர் ரெசிபி!

சாப்பிடத் தூண்டும் சாக்லேட் பிரவுனி! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! சூப்பர் ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Nov 12, 2024 01:56 PM IST

சுவையான ஒரு பேஸ்டரி உணவு தான் பிரவுனி இதில் பல வகையான பிரவுனிகள் உள்ளன. நாம் இங்கு வீட்டிலேயே எளிமையாக சாக்லேட் பிரவுனி செய்வது எப்படி என பார்ப்போம்.

சாப்பிடத் தூண்டும் சாக்லேட் பிரவுனி! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! சூப்பர் ரெசிபி!
சாப்பிடத் தூண்டும் சாக்லேட் பிரவுனி! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! சூப்பர் ரெசிபி!

தேவையான பொருட்கள் 

200 கிராம்  சாக்லேட்

2 டேபிள்ஸ்பூன் கோக்கோ பவுடர்

கால் கப் முந்திரி

கால் கப் பாதாம்

1 டேபிள்ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

தேவையான அளவு பட்டர் பேப்பர்

150 கிராம் பட்டர்

200 கிராம் சர்க்கரை

120 கிராம் மைதா

3 முட்டை

தேவையான அளவு உப்பு

செய்முறை 

முதலில் சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு  இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் தீயை மிதமான சூட்டில் வைதிக்கது அதில் ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து அதில் உருக்க வேண்டிய  சாக்லேட்டை போட்டு அந்த சூடான தண்ணீர் மேல் வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது சாக்லேட் உருகி வரும். இதுவே டபுள் பாயிலிங் முறையாகும். சாக்லேட் நன்கு உருகியவுடன் இதில் வெண்ணெய் சேர்க்கவும். இதனை நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் வெண்ணெய் மற்றும் சாக்லேட் நன்கு ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கரையும்.  பின்னர் இதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அதில் சர்க்கரையை கலந்து விட வேண்டும். 

இப்பொழுது வேறு ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 3 முட்டைகளை ஊற்றி ஒரு கரண்டியை வைத்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். இதில் நாம் வைத்திருந்த சாக்லேட் வெண்ணெய் கலவையை இதில் ஊற்ற வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அந்த கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.இப்போது இந்த கலவையுடன் கோக்கோ பவுடர் மற்றும் வெண்ணிலா எசன்ஸ்  சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் இதில் ஒரு கப் மைதா மாவை சேர்த்து நன்கு கிளற வேண்டும். மேலும் தேவையான அளவு உப்பை சேர்க்க வேண்டும். பின்பு இதில் பொடியாக நறுக்கிய கால் கப் முந்திரி மற்றும் பாதாமை சிறு துண்டுகளாக்கி இந்த கலவையுடன் சேர்க்கவும். இந்த கலவையை ஒரு ட்ரேயின் ஓரங்களில் வெண்ணெய் தடவி நடுவில் பட்டர் பேப்பரை வைத்து இந்த கலவையை அதில் ஊற்றவும். இதனை மைக்ரோ ஓவன் அல்லது குக்கரில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான சாக்லேட் பிரவுனி தயார். இதனை அனைவருக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள். வீட்டில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.