Kerala Unniyappam: கேரள ஸ்பெஷல் சுவையான உண்ணியப்பம் செய்வது எப்படி? சூப்பர் ஈஸி ரெஸிபி!-how to prepare tasty uniyappam - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kerala Unniyappam: கேரள ஸ்பெஷல் சுவையான உண்ணியப்பம் செய்வது எப்படி? சூப்பர் ஈஸி ரெஸிபி!

Kerala Unniyappam: கேரள ஸ்பெஷல் சுவையான உண்ணியப்பம் செய்வது எப்படி? சூப்பர் ஈஸி ரெஸிபி!

Suguna Devi P HT Tamil
Sep 21, 2024 05:38 PM IST

Kerala Unniyappam: கடவுளின் தேசம் எனக் கூறப்படும் கேரள மாநிலம் பல விஷயங்களுக்கு உலக அளவில் பிரபலமனதாகும். அந்த வரிசையில் அந்த மாநிலத்தின் உணவும் மிகவும் புகழ் பெற்றது.

Kerala Unniyappam: கேரள ஸ்பெஷல் சுவையான உண்ணியப்பம் செய்வது எப்படி? சூப்பர் ஈஸி ரெஸிபி!
Kerala Unniyappam: கேரள ஸ்பெஷல் சுவையான உண்ணியப்பம் செய்வது எப்படி? சூப்பர் ஈஸி ரெஸிபி!

தேவையான பொருட்கள் 

ஒரு கப் பச்சரிசி, அரை கப் புழுங்கல் அரிசி, கால் கப் கடலைப்பருப்பு, கால் கப் துவரம் பருப்பு,கால கப் பாசிப்பருப்பு, கால் கப் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு கிலோ வெல்லம், ஒரு தேங்காய், 15 ஏலக்காய் துண்டுகள், 200 கிராம் முந்திரி பருப்பு, 150 கிராம்நெய் ஆகியவற்றை சரியான அளவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு எண்ணெய், தேவையான அளவு உப்பு ஆகியவை வேண்டும். 

உண்ணியப்பம் மாவு தயாரித்தல் 

முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகியவைகளை தண்ணீரில் ஊற போட வேண்டும். கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாசிபருப்பு என அனைத்து பருப்புகளையும் ஊற போட வேண்டும். இவை அனைத்தும் மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வரை ஊற வேண்டும். 

நன்றாக ஊறிய பின் நீரை வடிகட்டியபின்னர் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கிரைண்டரில் பொது அரைக்க வேண்டும். இதில் ஏலக்காய் துண்டுகள், வெல்லம் ஆகியவாகளை போட்டு அரைக்கவும். உண்ணியப்பம் செய்வதற்கான பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  

செய்முறை 

அரைத்த மாவை இரண்டில் இருந்து மூன்று மணி நேரங்கள் அப்படியே மூடி வைக்கவும். பின்னர் முந்திரிகளை பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கி எடுத்துக் கொள்ளவும். இதற்கு முழுவதும் நெய் மட்டும் பயன்படுத்தினால் மிகுந்த சுவையுடன் இருக்கும். 

பணியார சட்டியில் நெய் விட்டு, சட்டி சூடானதும் மாவை ஊற்றவும். இரண்டு நிமிடம் கழித்து அதனை திருப்பி விடவும். மறுபக்கத்தையும் இரண்டு நிமிடம் வேக விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். இதனை மீண்டும் எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். சரியான அளவில் சுவை மிகுந்த உண்ணியப்பம் ரெடி. உங்கள்  வீடுகளில் அனைவருக்கும் கொடுத்து, மகிழ்ச்சியாக சாப்பிடுங்கள். 

விழாக்கால கொண்டாட்டம் 

பொதுவாகவே இந்தியாவில் விழாக்காலங்களில் உணவும் ஒரு கொண்டாட்டமாக இருந்து வருகிறது. கேரளாவில் உண்ணியப்பம் முக்கிய விழாக்களில் செய்யப்படுகிறது. ஓணம்  போன்ற பண்டிகைகளில் இது போன்ற இனிப்பு பண்டங்கள் செய்வது வழக்கம் ஆகிய இருந்து வருகிறது. இந்நிலையில் நீங்களும் உங்கள் வீடுகளில் கொண்டாடப்படும் விழாக்களில் இதனை செய்து கொண்டாடுங்கள்.  

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.