தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய இனி பச்சரிசி போதும்! இப்படி செஞ்சு பாருங்க! சிம்பிள் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய இனி பச்சரிசி போதும்! இப்படி செஞ்சு பாருங்க! சிம்பிள் ரெசிபி!

தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய இனி பச்சரிசி போதும்! இப்படி செஞ்சு பாருங்க! சிம்பிள் ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Oct 23, 2024 10:11 AM IST

தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் அதன் முக்கிய உணவுப் பொருளாக உள்ளது. நமது வீடுகளில் தீபாவளிக்கு பலகாரங்கள் செய்வது வழக்கமான ஒரு செயலாக இருந்து வருகிறது.

தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய இனி பச்சரிசி போதும்! இப்படி செஞ்சு பாருங்க! சிம்பிள் ரெசிபி!
தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய இனி பச்சரிசி போதும்! இப்படி செஞ்சு பாருங்க! சிம்பிள் ரெசிபி! (Madras Samayal)

தேவையான பொருட்கள்:

அரை கப் பச்சரிசி (100 கிராம்)

ஒன்றரை கப் தண்ணீர்

கால் கப் பால்

 200 கிராம் வெல்லம் 

1 கப் தண்ணீர்

6-8 டீஸ்பூன் நெய்

10 முந்திரி

சிறிதளவு தேங்காய் துண்டுகள்

அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள்

செய்முறை

முதலில் இரண்டு அரை பச்சரிசியை கழுவி ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த அரை கப் பச்சரிசியை குக்கரில் போட்டு மூன்று மடங்கு தண்ணீரை ஊற்றி மேலும் அரை கப் பாலை ஊற்றி நான்கு விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் ஒன்றரை கப் வெல்லம் மற்றும் தண்ணீரை ஊற்றி வெல்லம் முழுவதுமாக கரையும் வரை பாகாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் காய்ச்சிய வெல்லப்பாகை வடிகட்டி அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும். மேலும் நாம் வேகவைத்து எடுத்துள்ள பச்சரிசியை அதில் சிறிது சிறிதாக கலக்க வேண்டும். இந்தக் கலவையை நன்கு கிளறி விட வேண்டும். சிறிது கட்டியாக ஆரம்பித்ததும் அதில் 2 டீஸ்பூன் நெய்யை சேர்த்து மீண்டும் கிளறவும். சிறிது நேரம் கிளறிய பின் மறுபடியும் இரண்டு டீஸ்பூன் நெய்யை சேர்த்து கிளறி விட வேண்டும். இவ்வாறு நன்றாக அல்வா பதத்திற்கு வரும் வரை கிண்டி விட வேண்டும். இதில் குறைந்தது 6 டீஸ்பூன் அளவுள்ள நே சேர்க்கும் போது நீண்ட நேரத்திற்கு இலகுவாக இருக்கும்.  பின்னர் மற்றொரு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் சிறிது சிறிதாக வெட்டிய தேங்காய் துண்டுகள் மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.  நாம் கிளறி வைத்துள்ள பச்சரிசி கலவையில் இந்த நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை போட வேண்டும். இறுதியாக சிறிதளவு ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கிண்டி விட வேண்டும். சுவையான இலகுவான பச்சரிசி இனிப்பு தயார். இதனை உங்கள் வீடுகளில் உள்ள அனைவருக்கும் கொடுக்கலாம். இனிப்பு குறைவாக வேண்டும் என நினைப்பவர்கள் வெல்லத்தின் அளவை குறைத்துக் கொள்ளலாம். நீங்களும் இதனை ட்ரை பண்ணி பாருங்கள். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.