பக்காவான ஈவினிங் ஸ்நாக்ஸ் மொறு மொறு சோமாஸ்! சட்டுனு செய்ய மாஸ் ரெசிபி இதோ!
வட இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு பண்டம் தான் சோமாஸ். இது தற்போது தமிழ்நாட்டிலும் பிரபலமடைந்து வருகிறது. இந்த சோமசை எளிமையாக செய்யும் முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
இந்தியாவின் ஒவ்வொரு நகரங்களும் ஒரு விதிமான பெருமையை கொண்டுள்ளன. மேலும் எல்லா நகரங்களும் அதன் பிரபல உணவு ஒன்றையும் கொண்டிருக்கும். அந்த வரிசையில் வட இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு பண்டம் தான் சோமாஸ். இது தற்போது தமிழ்நாட்டிலும் பிரபலமடைந்து வருகிறது. இந்த சோமசை எளிமையாக செய்யும் முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
1 கப் மைதா மாவு
2 டேபிள்ஸ்பூன் ரவா
கால் கப் பொட்டுக்கடலை
கால் கப் துருவிய தேங்காய்
அரை கப் சர்க்கரை
10 முந்திரி பருப்பு
2 ஏலக்காய்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு நெய்
செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை போட வேண்டும். மேலும் அதில் தேவையான அளவு நெய், மற்றும் தேவையான அளவு ரவையை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக சூடு தண்ணீரை சேர்த்து இந்த மாவை மெதுவாக பிசைய ஆரம்பிக்க வேண்டும். இதனை கெட்டியான பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை அப்படியே மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடாக்க வேண்டும். கடாய் சூடானதும் அதில் பொரிகடலையை போட்டு வறுக்க வேண்டும். இது நன்கு வறுபட்டதும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொறகொறப்பான பதத்திற்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து உருக்கவும். நெய் உருகியதும் அதில் பொடியாக நறுக்கிய முந்திரி, துருவிய தேங்காயைப் சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு இந்த வறுத்த கலவையில் அரைத்து வைத்த பொரிகடலை மாவை போட்டு கலக்கவும். பின்னர் பிசைந்து வைத்திருந்த மாவை சப்பாத்தி மாவு போல சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தேய்த்து கொள்ளவும். மேலும் தேய்த்த மாவை சோமாஸ் அச்சில் எண்ணெய் தடவி வைத்து பின் அதன் நடுவே பூரணத்தை வைத்து மாவின் ஓரங்களில் தண்ணியை தடவி அச்சை மூடி ஓரங்களில் வரும் மாவை வழித்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சுட்டதும் ஒவ்வொன்றாக இந்த சோமாஸ்ஸை எண்ணெய்யில் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு பொன்னிறமானதும் எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும். சுவையான மொறு மொறு சோமாஸ் தயார். வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் சோமாஸ் செய்து கொடுக்கலாம். மாலை நேரத்தில் சிறந்த ஸ்நாக்ஸ் சாய்ஸ்ககு இது ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும். அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். கடைகளில் சென்று வாங்கி சாப்பிடும் இனிப்பு உணவுகளை விட இது போல வீட்டிலும் செய்து கொடுப்பதால் சுத்தமான உணவுகளை சாப்பிடலாம்.
டாபிக்ஸ்