நா ஊறும் உப்புக் கொழுக்கட்டை! இப்படி செஞ்சு கொடுத்தா எல்லாரும் சாப்பிடலாம்! ஈசி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  நா ஊறும் உப்புக் கொழுக்கட்டை! இப்படி செஞ்சு கொடுத்தா எல்லாரும் சாப்பிடலாம்! ஈசி ரெசிபி!

நா ஊறும் உப்புக் கொழுக்கட்டை! இப்படி செஞ்சு கொடுத்தா எல்லாரும் சாப்பிடலாம்! ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Nov 10, 2024 07:14 AM IST

இனிப்பு சேர்க்காத உப்பு கொழுக்கட்டை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாக இருந்து வருகிறது. இந்த சுவையான உப்புக் கொழுக்கட்டையை செய்யும் எளிய முறையை இங்கு காணலாம்.

நா ஊறும் உப்புக் கொழுக்கட்டை! இப்படி செஞ்சு கொடுத்தா எல்லாரும் சாப்பிடலாம்! ஈசி ரெசிபி!
நா ஊறும் உப்புக் கொழுக்கட்டை! இப்படி செஞ்சு கொடுத்தா எல்லாரும் சாப்பிடலாம்! ஈசி ரெசிபி! (Abitha Jana)

தேவையான பொருட்கள்

1 கப் இட்லி அரிசி

அரை கப் துருவிய தேங்காய்

2 வற மிளகாய்

2 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு

2 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு

1 டேபிள்ஸ்பூன் கடுகு

1 டேபிள்ஸ்பூன் சீரகம்

1டேபிள்ஸ்பூன் பெருங்காய தூள்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு எண்ணெய்

சிறிதளவு கறிவேப்பிலை

செய்முறை

முதலில் அரிசியை கழுவி சுத்தம் செய்து ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் சீரகத்தை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை வதக்கவும். பிறகு அதில் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு அதை நன்கு கலந்து விட்டு வறுக்கவும். இப்பொழுது அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் பெருங்காய தூளை தூவி அதை நன்கு கலந்து விடவும். பின்பு அதில் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு, மற்றும் பொடியாக நறுக்கிய வற மிளகாயை  போட்டு அதை நன்கு கலந்து விட்டு அதை வதக்கவும். 

ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் இட்லி மாவை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதில் இருக்கும் தண்ணீர் நன்கு வற்றி அது கெட்டியாகும் வரை அதை வதக்கவும். மாவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு அதை சிறிது நேரம் ஆற விடவும். மாவு ஆறிய பின்னர் ஒரு கை அளவு மாவை எடுத்து அதை வட்டம் அல்லது உருண்டை வடிவில் பிடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இந்த கொழுக்கட்டை அச்சுகளை பயன்படுத்தியும் பிடித்து வைத்துக் கொள்ளலாம். பின்னர் இட்லி தட்டை எடுத்து அதில் நன்கு எண்ணெய் தடவி பின்பு பிடித்து வைத்திருக்கும் கொழுக்கட்டையை அதில் ஒவ்வொன்றாக வைத்து கொள்ளவும். பின்பு இதனை அடுப்பில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்த இட்லி பாத்திரத்தில் வைக்க வேண்டும். மூடி போட்டு அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வேக விடவும். 10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு கொழுக்கட்டைகளை வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும். வீட்டில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உப்புக் கொழுக்கட்டை தயார். இதனை உங்கள் வீட்டில் செய்து பார்த்து மகிழுங்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.