தினமும் காலையில் சத்தான பானம்! ஆரஞ்சு காரட் ஜூஸ் செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தினமும் காலையில் சத்தான பானம்! ஆரஞ்சு காரட் ஜூஸ் செய்வது எப்படி?

தினமும் காலையில் சத்தான பானம்! ஆரஞ்சு காரட் ஜூஸ் செய்வது எப்படி?

Suguna Devi P HT Tamil
Nov 29, 2024 07:09 PM IST

நமது உடலின் வைட்டமின்களை அதிகரிக்க ஆரஞ்சு மற்றும் காரட்டை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை எளிமையாக்க இரண்டையும் சேர்த்து ஜூஸ் செய்யும் முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

தினமும் காலையில் சத்தான பானம்! ஆரஞ்சு காரட் ஜூஸ் செய்வது எப்படி?
தினமும் காலையில் சத்தான பானம்! ஆரஞ்சு காரட் ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

2 கேரட்

2 ஆரஞ்சு

1/2 எலுமிச்சம் பழம்

4 மேஜைக்கரண்டி சர்க்கரை

½ இஞ்சி துண்டு

தேவையான அளவு ஐஸ்க்யூப்ஸ்

செய்முறை

முதலில் கேரட் மற்றும் ஆரஞ்சை வெட்டி வைத்து, பின் புஎலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு சர்க்கரையை போட்டு அதில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் சர்க்கரை நன்கு கரையும் வரை அதை கிண்டி விடவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் அதை ஆற விடவும்.

அடுத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட் மற்றும் இஞ்சி துண்டை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைத்து கொள்ளவும். இப்பொழுது அந்த சக்கையை ஒரு வெள்ளை துணியில் கொட்டி துணியை மடித்து நன்கு இருக்கமாக சுற்றி வரும் சாரை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். அடுத்து அந்த கேரட் சக்கையை மீண்டும் ஒருமுறை மிக்ஸி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதை மீண்டும் நன்கு அரைக்கவும்.

பிறகு அந்த சக்கையை நாம் முன்பு செய்தது போலவே மீண்டும் ஒரு முறை செய்து வரும் சாறை நாம் ஏற்கனவே சாறை எடுத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் சேர்த்து விடவும். பின்பு ஒரு juicer யின் மூலம் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சாறை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் கேரட் சாறில் ஊற்றி அதை நன்கு கலக்கி விடவும். இப்பொழுது அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப தண்ணியை ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும். (ஜூஸ் திக்காக வேண்டும் என்றால் தண்ணீர் கம்மியாகவும், ஜூஸ் தண்ணியாக வேண்டும் என்றால் தண்ணீர் அதிகமாகவும் சேர்த்து கொள்ளவும்.) அடுத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் சர்க்கரை சிரப்பை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஊற்றி அதை நன்கு கலக்கி விடவும். பின்பு ஒரு கிளாஸ் டம்ளரை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஐஸ்க்யூப்ஸை போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் கேரட் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி அதில் 2 ஆரஞ்சு பழ slice ஐ நறுக்கி போட்டு அதை சில்லென்று பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் அருமையான மற்றும் உடம்பிற்கு மிகவும் சத்தான கேரட் ஆரஞ்சு ஜூஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.