இனி மாவு புளிக்கும் வரை காத்திருக்க தேவையில்லை! உடனே செய்யலாம் இன்ஸ்டன்ட் இட்லி! இதோ சிம்பிள் ரெசிபி!
தமிழ்நாட்டின் பிரதான காலை உணவாக இட்லி இருந்து வருகிறது. தினமும் காலை இட்லியை சாப்பிட்டால் தான் தமிழர்களுக்கு அந்த நாள் சிறப்பாக தொடங்கும். அந்த அளவிற்கு இட்லி ஒரு பிரியமான உணவாக உள்ளது.
தமிழ்நாட்டின் பிரதான காலை உணவாக இட்லி இருந்து வருகிறது. தினமும் காலை இட்லியை சாப்பிட்டால் தான் தமிழர்களுக்கு அந்த நாள் சிறப்பாக தொடங்கும். அந்த அளவிற்கு இட்லி ஒரு பிரியமான உணவாக உள்ளது. ஆனால் இட்லி செய்ய வேண்டும் என்றால் முந்தைய நாளே அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து மாவை அரைத்து வைக்க வேண்டும். சில சமயங்களில் வேகமான வாழ்க்கை முறையால் இட்லிக்கு மாவு அரைக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இனி அதற்கெல்லாம் கவலை பட வேண்டும். மிகவும் எளிமையான முறையில் இன்ஸ்டன்ட் இட்லி செய்யலாம். இதனை செய்யும் எளிய முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ பாசிபருப்பு
கால் கிலோ ரவை
2 காரட்
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
10 முதல் 12 முந்திரி பருப்பு
ஒரு டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு
ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு
ஒரு டீஸ்பூன் கடுகு
சிறிதளவு கறிவேப்பிலை
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும். இவை நன்கு வறுபட்டு பொன் நிறமானதும், அதில் சிறிதளவு கறிவேப்பிலை போட வேண்டும். மேலும் இதில் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். இவை நன்கு வதங்கியதும் அடிக்கில் துருவிய கேரட்டை போட வேண்டும். கேரட் நன்கு வதங்கி வந்ததும் இதில் வருத்த ரவையை போட வேண்டும். ரவையை வறுத்து போடும் போது நன்றாக இருக்கும். பின்னர் இதை எடுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இட்லி செய்வதற்கு முதன் முதலில் 2 மணி நேரத்திற்கு முன்னதாக பாசிபருப்பை ஊற வைக்க வேண்டும்.
ஊற வைத்த பாசிப்பருப்பை தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் இதில் வதக்கி வைத்திருந்த ரவை கலவையை எடுத்து போட்டு கலக்கி விட வேண்டும். பின்னர் இந்த கலவையை நன்கு கலந்து விட்டு உடனே புளிப்பதற்கு சிறிது ஈனோவை போட வேண்டும். இப்பொழுது சத்தான இன்ஸ்டன்ட் இட்லி மாவுதயார். இப்பொழுது ஒரு இட்லி குக்கர் அல்லது இட்லி சட்டியை எடுத்து அதில் எண்ணெய் தடவி ஒவ்வொரு குழியிலும் ஒரு முந்திரி பருப்பை வைக்க வேண்டும். பின்னர் நாம் செய்து வைத்திருக்கும் இட்லி மாவை மெதுவாக ஊற்ற வேண்டும். சரியாக 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். வெந்த பின்னர் இதனை தண்ணீர் தெளித்து இறக்கினால் சுவையான மற்றும் சூடான இன்ஸ்டன்ட் இட்லி ரெடி. இதனை நீங்கள் எளிமையாக செய்து விடலாம். இது மிகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். வழக்கமான இட்லியைக் காட்டிலும் இது போன்று வித்தியாசமாக செய்து கொடுக்கும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
டாபிக்ஸ்