பல நன்மை தரும் பாசிப்பயறு கிரேவி!சப்பாத்தி முதல் சாதம் வரை! உடனே செஞ்சு சாப்பிடலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பல நன்மை தரும் பாசிப்பயறு கிரேவி!சப்பாத்தி முதல் சாதம் வரை! உடனே செஞ்சு சாப்பிடலாம்!

பல நன்மை தரும் பாசிப்பயறு கிரேவி!சப்பாத்தி முதல் சாதம் வரை! உடனே செஞ்சு சாப்பிடலாம்!

Suguna Devi P HT Tamil
Oct 24, 2024 10:12 AM IST

நாம் சாப்பிடும் அனைத்து பயறு வகைகளிலும் பல விதமான சத்துக்கள் உள்ளன. பாசிப்பயறு அல்லது பச்சைப்பயறு எனக் கூறப்படு பயறில் அதிகமான புரத சத்துக்கள் உள்ளன.

பல நன்மை தரும் பாசிப்பயறு கிரேவி!சப்பாத்தி முதல் சாதம் வரை! உடனே செஞ்சு சாப்பிடலாம்!
பல நன்மை தரும் பாசிப்பயறு கிரேவி!சப்பாத்தி முதல் சாதம் வரை! உடனே செஞ்சு சாப்பிடலாம்!

தேவையான பொருட்கள்

1 கப் பாசிப்பயறு 

2 பெரிய வெங்காயம்

2 தக்காளி

3 பூண்டு பல்

1 இஞ்சி துண்டு

1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

1 டீஸ்பூன் சீரகம்

1 டீஸ்பூன்  கரம் மசாலா

1 டீஸ்பூன் மல்லி தூள்

1 டீஸ்பூன் சீரக தூள்

1 பிரிஞ்சி இலை

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு நெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

முதலில் பாசிப்பயறை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை ஊற வைக்கவும். அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதை சூடாக்கவும்.  எண்ணெய் சூடான பின் அதில் சீரகத்தை போட்டு அது வெடித்ததும் அதில் பிரியாணி இலையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.அரை நிமிடத்திற்கு பிறகு அதில் பொடியாக நறுக்கியச வெங்காயத்தை போட்டு நன்கு கலந்து விட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் அரைத்து எடுத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு அதை நன்கு கலந்து விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும். பின்பு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வதக்கவும். தக்காளி நன்கு மசிந்ததும் ஊற வைத்திருக்கும் பச்சை பயரை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு வேக விடவும். நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து அதில்  நறுக்கிய கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அதை எடுத்து சப்பாத்தியுடன் சுட சுட பரிமாறவும். இப்பொழுது சூடான மற்றும் மிகவும் சத்தான பச்சை பயறு கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.