மேகி நூடுல்ஸ் பாக்கெட் இருக்கா? அப்போ இப்படேஸ்டியான முட்டை மசாலா மேகி செய்வது எப்படி?
வீட்டில் எப்போதும் அனைவரும் விரும்பும் உணவாக மேகி நூடுல்ஸ் இருந்து வருகிறது. இது வேறு நாட்டில் இருந்து வந்த உணவாக இருந்தாலும் இந்தியா முழுவதும் பிரபலமான உணவாகி விட்டது. குறிப்பாக இந்தியாவின் மலைப்பிரதேசங்களில் மேகி ஒரு முக்கிய உணவாக உள்ளது.
வீட்டில் எப்போதும் அனைவரும் விரும்பும் உணவாக மேகி நூடுல்ஸ் இருந்து வருகிறது. இது வேறு நாட்டில் இருந்து வந்த உணவாக இருந்தாலும் இந்தியா முழுவதும் பிரபலமான உணவாகி விட்டது. குறிப்பாக இந்தியாவின் மலைப்பிரதேசங்களில் மேகி ஒரு முக்கிய உணவாக உள்ளது. சுவையான முட்டை மசாலா மேகி செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
3 பாக்கெட் மேகி நூடுல்ஸ்
5 முட்டை
2 பெரிய வெங்காயம்
4 தக்காளி
3 பல் பூண்டு
சிறிதளவு இஞ்சி
2 டீஸ்பூன் சீரகம்
2 டீஸ்பூன் மல்லி தூள்
2 டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
3 பாக்கெட் மேகி மசாலா
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு ண்ணெய்
சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் முட்டைகளை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பின்பு முட்டைகளை அதில் போட்டு வேக வைக்க வேண்டும். பின்னர் முட்டை வெந்த பின்னர் அதன் ஓடுகளை பிரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் சீரகத்தை போட்டு வறுக்க வேண்டும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும். இப்பொழுது அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும். பிறகு அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மற்றும் மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு வேக விடவும்.
பிறகு அதில் மேகி மசாலாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். பின்பு அதில் தேவையானஅளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு கொதிக்க விடவும். பிறகு அதில் மேகி துண்டுகளை எடுத்து உடைத்து போட்டு அது மசாலாவோடு ஓட்டுமாறு அதை நன்கு கலந்து நன்றாக வேக வைக்க வேண்டும். மேகி ஓரளவிற்கு வெந்த நிலையில் அதில் வேக வைத்து எடுத்த முட்டைகளை நறுக்கி இதனுடன் சேர்க்க வேண்டும். பிறகு அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அதை அப்படியே எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். பின்னர் அதே கடாயில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அது பாதி வெந்து இருக்கும்போது அதை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் மேகி மீது பக்குவமாக வைத்து அதை சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமான முட்டை மசாலா மேகி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள். மாலை நேரங்களிலும் செய்து சாப்பிடலாம்.
டாபிக்ஸ்