சிம்பிளான மார்னிங் பிரேக்ஃபாஸ்ட்! சுவையான முட்டை மசாலா டோஸ்ட் செய்வது எப்படி? இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சிம்பிளான மார்னிங் பிரேக்ஃபாஸ்ட்! சுவையான முட்டை மசாலா டோஸ்ட் செய்வது எப்படி? இதோ ரெசிபி!

சிம்பிளான மார்னிங் பிரேக்ஃபாஸ்ட்! சுவையான முட்டை மசாலா டோஸ்ட் செய்வது எப்படி? இதோ ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Dec 12, 2024 11:43 AM IST

காலை நேரத்தில் சரியான காலை உணவு செய்வது என்றால் எல்லாருக்கும் ஒரு பெரிய சிக்கலாகத்தான் உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு நாம் செய்து தரும் வழக்கமான காலை உணவுகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன.

சிம்பிளான மார்னிங் பிரேக்ஃபாஸ்ட்! சுவையான முட்டை மசாலா டோஸ்ட் செய்வது எப்படி? இதோ ரெசிபி!
சிம்பிளான மார்னிங் பிரேக்ஃபாஸ்ட்! சுவையான முட்டை மசாலா டோஸ்ட் செய்வது எப்படி? இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

4 முதல் 6 பிரவுன் பிரட் துண்டுகள்

10 முட்டை 

2 பெரிய வெங்காயம்

2 பச்சை மிளகாய்

கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்  

2 டீஸ்பூன் மிளகு தூள் 

தேவையான அளவு உப்பு  

2 டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ் 

சிறிதளவு கொத்தமல்லி இலை

சிறிதளவு வெண்ணெய் 

செய்முறை

முதலில் ஒரு அகன்ற கிண்ணத்தில் 10 முட்டைகளை உடைத்து ஊற்றிக்கொள்ளவும். முட்டையை பீட்டர் கொண்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பீட்டர் வைத்து அடித்த முட்டையில், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு, மிளகாய் தூள் மற்றும் ஒரு கைப்பிடியளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கி விட வேண்டும். இப்பொழுது முட்டை கலவை தயார். பின்னர் ஒரு ப்ரெட் துண்டை எடுத்து, அதை ஒரு தட்டில் வைத்து, நாம் செய்து வைத்திருந்த முட்டை கலவையை பிரட் துண்டின் மீது ஊற்றவும். அதன் எல்லா பக்கத்திலும் பரவுமாறு சமமாக பரப்பி விட வேண்டும்.

 பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். பின்னர் நன்கு சூடானதும் அதில் வெண்ணெய் போட்டு நன்றாக பரப்பி, தவாவின் மீது முட்டை கலவையுடன் உள்ள பிரட் துண்டை வைக்க வேண்டும். பின்னர் பிரட்டின் மறு புறமும்  முட்டை கலவையை ஊற்றி சமமாக பரப்பி விட வேண்டும். பிரட் துண்டு முதலில் ஒரு பக்கம் வெந்ததும், பிரட்டை மறுபக்கம் புரட்டி போட்டு அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து, தவாவின் மீது மெதுவாக வைக்க வேண்டும். பிரட் துண்டின் இரண்டு பக்கமும் வெந்ததும் தவாவில் இருந்து இறக்கி வைக்கவும்ம். இப்பொழுது நமது சுவையான முட்டை மசாலா டோஸ்ட் சூடாக பரிமாற தயாராக உள்ளது. இதனை தக்காளி கெட்சப் அல்லது புதினா சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இது போன்ற ஈசி சமையல் முறைகளால் அனைவருக்கும் வேகமாக சமையல் வேலை முடிந்து விடும். பின்னர் இது போன்ற காலை உணவுகளை விட மாலை நேரத்தில் இணை உணவாக சாப்பிடவும் செய்யலாம். அப்போதும் நல்ல வயிறு நிறைவைக் கொடுக்கும், 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.