தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்! நெய் மைசூர் பாக் செய்வது எப்படி? இதோ சிம்பிள் ரெசிபி!
தீபாவளி ஸ்வீட் என்றாலே தவறாமல் இடம்பிடிக்கும் நெய் மசூர் பாக்கை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.
தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்நிலையில் பல வீடுகளிலும், அலுவலகங்களிலும் தீபாவளி பலகாரங்கள் கொடுக்கத் தொடங்கி விட்டனர். தீபாவளி என்றாலே பட்டாசு, ஸ்வீட் ஆகியவை தவிர்க்க முடியாத பொருட்கள் ஆகும். இவை இரண்டும் இல்லாமல் தீபாவளி களைகட்டாது. நாம் பேக்கரிகளில் ஸ்வீட் டப்பாக்களை வாங்கி நண்பர்களுக்கும், உறவினார்களுக்கும் தீபாவளி பரிசாக வழங்குவோம். மகிழ்ச்சியும் இது போன்ற அனைவருக்கும் பகிரும் போது இரட்டிப்பாகிறது. இந்த நிலையில் தீபாவளி ஸ்வீட் என்றாலே தவறாமல் இடம்பிடிக்கும் நெய் மசூர் பாக்கை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். அதன் எளிய செய்முறை பின்வருமாறு.
தேவையான பொருட்கள்
ஒரு கப் கடலை மாவு
250 கிராம் நெய்
300 கிராம் சர்க்கரை
ஒரு கப் எண்ணெய்
ஒரு கப் தண்ணீர்
சிறிதளவு உப்பு
செய்முறை
முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கடலை மாவை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவை ஒரு சல்லடை வைத்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேறு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 250 கிராம நெய் மற்றும் ஒரு கப் எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை பாதி எடுத்து சலித்து எடுத்து வைத்த மாவில் ஊற்ற வேண்டும். இதனை ஒரு ஸ்பூன் வைத்து நன்கு கலந்து விட வேண்டும். இந்த கலவையை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் 300 கிராம் சர்க்கரை மற்றும் ஒரு கப் தண்ணீரை ஊற்றி காய்ச்ச வேண்டும். மிதமான சூட்டில் கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். சரியான கம்பி பதம் வந்ததும் நாம் கலந்து வைத்து இருந்த மாவு கலவையை அதில் ஊற்ற வேண்டும். ஊற்றிய பின் நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் தனியாக எடுத்து வைத்திருந்த பாதி நெய் மற்றும் எண்ணெய் கலவையை சிறிது சிறிதாக இதில் ஊற்ற வேண்டும். ஒவ்வொரு முறை ஊற்றிய பின்னும் அதனை நன்கு கிண்ட வேண்டும். பின்னர் நன்கு நுரை தெப்பி வரும் பதத்தில் அடுப்பை நிறுத்தி விட்டு இறக்க வேண்டும். நன்றாக கிண்டும் போது இறுதியாக கரண்டியில் மாவு ஒட்டாமல் மென்மையாக வரும். அதுவே சரியான பதம் ஆகும். இப்போது இதனை ஒரு நீளமான ட்ரேயில் இதனை ஊற்ற வேண்டும். இதன் மேல் தளத்தை சமப்படுத்த வேண்டும். பின்னர் இது ஆறியவுடன் நமக்கு ஏற்றவாரான துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். சுவையான மென்மையான பக்காவான நெய் மைசுறு பார்க் ரெடி
இந்த நெய் மைசூர் பாக்கை நீங்கள் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். செலவும் மிக குறைவகாவே ஆகும். பக்கத்து வீடுகளுக்கும், உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கும் இதனை செய்து கொடுத்து அசத்துங்கள். இது போன்ற தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் செய்வது எப்படி என அடுத்த்தில் பார்ப்போம்.
டாபிக்ஸ்