Chicken Lollipop: சுவையான சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி? இனி வீட்டிலேயே செஞ்சு அசத்தலாம்!
Chicken Lollipop: இந்தியாவில் பெரும்பான்மையானவர்களால் விரும்பப்படும் உணவாக சிக்கன் இருந்த வருகிறது. சிக்கன் மீதான பிரியம் இந்தியர்களுக்கு அதிகம் என சமீபத்திய ஒரு ஆய்வில் கூறப்பட்டிருந்தது.
இந்தியாவில் பெரும்பான்மையானவர்களால் விரும்பப்படும் உணவாக சிக்கன் இருந்த வருகிறது. சிக்கன் மீதான பிரியம் இந்தியர்களுக்கு அதிகம் என சமீபத்திய ஒரு ஆய்வில் கூறப்பட்டிருந்தது. இத்தகைய சிக்கனில் பல விதமான ரெஸிபிகள் இருந்தாலும், சிக்கன் லாலிபாப்பிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமை இருந்து வருக்கிறது. ஹோட்டல்களுக்கு சென்றாலே நிச்சயமாக சிக்கன் லாலிபாப் சாப்பிடுவோர் அதிகம் உள்ளனர். இந்த சிக்கன் லாலிபாப்பை வீட்டிலேயே செய்யும் எளிமையான முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ சிக்கன்
ஒரு முட்டை
1 பெரிய வெங்காயம்
கால் கப் சோள மாவு
சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்
3 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
5 பூண்டு பல்
சிறிதளவு இஞ்சி
2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
2 டேபிள் ஸ்பூன் டொமேட்டோ கெட்சப்
3 டேபிள் ஸ்பூன் ஸ்செஷ்வான் சாஸ்
2 டேபிள் ஸ்பூன் வினிகர்
சிறிதளவு கருப்பு மிளகு தூள்
தேவையான அளவு சர்க்கரை
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
முதலில் சிக்கனை நன்கு கழுவி எடுத்த வைத்துக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நறுக்கி அரைத்து எடுத்தக் கொள்ளவும். கழுவிய சிக்கனை லாலிபாப் ரேசிபிக்கு ஏற்றவாறு தயார் செய்தி கொள்ள வேண்டு. பின்னர் ஒரு பாத்திரத்தில் சிக்கன் மற்றும் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாய், வினிகர், கருப்பு மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் தேவாயான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். இந்த கலவையை அரை மணி நேரம் ஊற விடவும். பின்னர் வேறு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, மிளகாய் தூள், ஒரு முட்டை மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பின்பு ஊற வைத்த சிக்கன் கலவையை எடுத்து இந்த மாவு கலவையில் போட்டு நன்கு கிளறவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்திருக்கும் சிக்கணை போட்டு பொரித்து எடுக்கவும். எல்லா பக்கங்களும் நன்றாக வேகும் வரை பொரித்து எடுக்கவும். பின்னர் வேறு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். அதில் நறுக்கிய பூண்டு, இஞ்சியை போட்டு வாசம் போடும் வரை வதக்கவும். பின்னர் அதில் சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், வினிகர், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும். பின்பு தண்ணீரில் கட்டியில்லாமல் சோள மாவை கரைத்து அதனை கடாயில் ஊற்றி கிளறவும். இந்த மசாலா சிறிது கெட்டியானதும் அதில் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து சிக்கன் நன்கு மசாலாவோடு ஒட்டுமாறு அதை சுமார் ஒரு நிமிடம் வரை நன்கு கிளறி விடவும். பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை போட்டு அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு சிக்கன் லாலிபாப் மசாலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
டாபிக்ஸ்